சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட இந்த படத்திற்கு 30 சதவீதம் கூடுதலான விலை நிர்ணயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சில பிரச்சனைகள் வந்து பின் ஒருவழியாக படம் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனத்தால் பல இடங்களில் படம் பெரிதாக வசூலிக்கவில்லை.
கேரளா, கர்நாடகா, மற்றும் ஓவர்சீஸ் உரிமையை வாங்கியர்கள் இந்த படத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட 30% அவர்கள் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நஷ்டத்தை அடுத்த படத்தில் அடைப்பதாக கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.




