சிவாங்கி புதிதாக கார் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மூன்று சீசனாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக சிவாங்கி பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்தது.
சிவாங்கி குறித்த தகவல்:
அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருந்தார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் ஷிவாங்கி நடித்து இருந்தார்.

சிவாங்கி படங்கள்:
அதனை அடுத்து இவர் குக் வித் கோமாளி 4வது சீசனில் சிவாங்கி குக்காக வந்து இருந்தார். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவர் நன்றாக சமைத்து மக்கள் மத்தியில் தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார். தற்போது சிவாங்கி அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் தான் ஒளிபரப்பட்டது. இது தவிர இவர் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்த வழங்க இருக்கிறார்.

சிவாங்கி புது கார்:
அதுமட்டுமில்லாமல் சிவாங்கி சில படங்களிலுமே கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சிவாங்கி புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிவாங்கி அவர்கள் புதிதாக ஹூண்டாய் க்ரெட்டா என்ற வெள்ளை நிற காரை வாங்கி இருக்கிறார். இதனுடைய விலை 13 லட்சம் முதல் 17 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்ட சிவாங்கி, என்னுடைய முதல் காரை வாங்கிவிட்டேன்.
View this post on Instagram
சிவாங்கி பதிவு:
இது சாத்தியமற்றது என்று நினைத்த 15 வயது சிவாங்கி இப்போது சந்தோஷமாக இருப்பாள். இதை சாத்தியமாக்கிய என்னுடைய பெற்றோர், குருக்கள், கடவுள்கள், பிரபஞ்சத்திற்கு நன்றி. மக்களே நீங்கள் இல்லாமல் நான் ஒன்றும் இல்லை. நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தீர்கள். என்னுடைய நல விரும்பிகள், மக்கள் அனைவருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.






