தன்னுடைய மாடர்ன் உடை குறித்த சர்ச்சைகளுக்கு சிவாங்கி கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மூன்று சீசனாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக சிவாங்கி பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்தது. அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருந்தார்.
சிவாங்கி குறித்த தகவல்:
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் ஷிவாங்கி நடித்து இருந்தார். அதனை அடுத்து குக் வித் கோமாளி 4வது சீசனில் சிவாங்கி குக்காக வந்து இருந்தார்.

சிவாங்கி உடை குறித்த சர்ச்சை:
ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவர் நன்றாக சமைத்து மக்கள் மத்தியில் தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார். அதற்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சினிமா, பாடல் பாடுவது, நிகழ்ச்சி என சிவாங்கி பட்டைய கிளப்பிக்கொண்டு இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே சிவாங்கி அவர்கள் மாடர்ன் உடையில் நிறைய போட்டோ சூட் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களை எல்லாம் சிவாங்கி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இதற்கு சிலர் பாராட்டி வந்தாலும் சிலர் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக, சிவாங்கி சினிமா வாய்ப்புக்காக தான் இப்படி எல்லாம் செய்கிறார். அதனால் தான் இவர் ஆடைகளில் கவர்ச்சி காட்டுகிறார் என்றெல்லாம் கமெண்ட் செய்திருந்தார்கள்.

சிவாங்கி பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சிவாங்கி, என்னுடைய ஆடைகளை குறித்து சில மோசமான கமெண்ட் வரும். ஆனால், நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவது கிடையாது. நான் மாடர்ன் உடைகளை போடுவது பட வாய்ப்புக்காக தான் என்றும், நான் ஆடைகளின் அளவை குறைத்து விட்டேன் என்றும் சொல்கிறார்கள். அதோடு நான் ஆடைகளை எல்லாம் அவுத்து போட்டு விட்டு திரிகிறேன் என்றெல்லாம் திட்டி இருக்கிறார்கள். இதற்கு முன்பு நான் கொஞ்சம் குண்டாக இருந்தேன். அதனால் மாடர்ன் துணிகள் எனக்கு எதுவும் செட் ஆகவில்லை. இப்போது உடல் எடையை குறைத்திருப்பதால் மாடர்ன் ஆடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் தான் போடுகிறேன்.
https://www.youtube.com/watch?v=5hC5w9MKH_w
சிவாங்கி கொடுத்த பதிலடி:
அவுத்து போட்டால் பட வாய்ப்பு கிடைக்குமான்னு எனக்கு புரியவில்லை. என்ன லாஜிக் இது? அவுத்து போட்டா எல்லாருக்குமே பட வாய்ப்பு கிடைக்கிறதா? எனக்கு ஆத்திரம் தான் வருகிறது. நான் எப்போதுமே டைட்டான உடைகளை போட மாட்டேன். நான் குண்டாக இருப்பதால் அப்படி இருந்தேன். ஆனால், ஷார்ட்ஸ் அணிந்து பார்த்தபோது எனக்கு அது சரியாக இருந்தது. நான் என்னுடைய விருப்பத்திற்காக தான் உடை அணிகிறேன்.
உடை மாறிவிட்டால் என்னுடைய கேரக்டரும் மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது. காலம் முழுக்க சுடிதார் மட்டுமே போட்டுக் கொண்டிருக்க முடியுமா? என்று கூறியிருக்கிறார்.






