சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகை வெண்பாவிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.
தமிழ் திரையுலகில் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘கற்றது தமிழ்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ராம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் கருணாஸ், அழகம் பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் அஞ்சலி நடித்த கேரக்டரின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை வெண்பா நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : முந்தைய காதல் தோல்விகளுக்கு இதான் காரணம்-மௌனம் களைத்த நயன்தாரா.
அது தான் நடிகை வெண்பா அறிமுகமான முதல் படமாம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இதில் நடிகை வெண்பா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் இயக்கியிருந்தார்.
‘பள்ளிப் பருவத்திலே’ படத்துக்கு பிறகு ‘காதல் கசக்குதய்யா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் வெண்பா. தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நடிகை வெண்பா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
இதையும் பாருங்க : டாப் நியூஸ்: வெளிநாட்டில் இருக்கும் மகன் குறித்து விஜய்யிடம் போன் செய்து விசாரித்துள்ள அஜித்.
இந்நிலையில், புதிதாக எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஸ்டில்ஸை வெண்பா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். வெண்பா பட்டு புடவையில் ஜொலிக்கும் இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. மேலும், ஸ்டில்ஸுக்கு ரசிகர்கள் அதிகமாக லைக்ஸ் போட்டு வருகின்றனர்.
கடைசியாக நடிகை வெண்பா நடிப்பில் வெளி வந்த படம் ‘மாயநதி’. இந்த படத்தினை அசோக் தியாகராஜன் இயக்கியிருந்தார். தற்போது, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற ஒரு படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை வெண்பா. இதில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார். இந்த படத்தினை இயக்குநர் எஸ்.எழில் இயக்கியிருக்கிறார்.