கொரோனா வைரஸத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் உலகமே ஆட்டம் கண்டு போய் இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வேதனையிலும் கவலையிலும் உள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவினால் 13, 387 பேருக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 437 க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இன்றுடன் ஊரடங்கு முடியவிருந்த நிலையில் தற்போது மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் அனைவரும் வீட்டில் அடங்கியுள்னர்.

இதையும் பாருங்க : கதையில் மாற்றம் செய்ய சொன்ன எஸ் ஏ சி. பிரசாந்த் பட வாய்ப்பை தவறவிட்டுள்ள விஜய்.
அதே போல பிரபலங்கள் கூட தங்களை இந்த நோயில் இருந்து பாதுகாத்துகொள்ள வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விஜய் தனது மகன் குறித்து கவலையில் இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார்.நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர்.இவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்
https://twitter.com/ThalaUdhay3/status/1250985584442486786
இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சாதாங்கமாட்ட , என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார்.அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த குறும்படம் வெளியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சய் நடித்த 'சிரி ' என்ற மற்றும் ஒரு குறும்படம் ஒன்று வெளியாகியானது.
இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த மகள். நினைவு நாளில் பாடகி சித்ரா உருக்கமான பதிவு.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமாத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தியே. கொரோனா பிரச்சனை காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் விஜய் மகன் கனடாவிலேயே தங்க வேண்டிய சூழலால் ஏற்பட்டுள்ளதாம். அங்கு கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் மகனை பிரிந்திருப்பதை நினைத்து தளபதி விஜய் மிகவும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறார் என்று நடிகர் சித்ரா லட்சுமண் தெரிவித்திருந்தார்.
https://twitter.com/SamratAJITH/status/1250972356996026368
இந்த நிலையி விஜய் மகன் குறித்து அஜித், விஜய்யிடம் விசாரித்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்யிடம் செல்போனில் பேசிய அஜீத் சஞ்சய் எப்படி இருக்கிறான் ?கனடாவில் இன்று சூழல் எப்படி இருக்கிறது ?என்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஜய் சஞ்சய் பாதுகாப்பா இருக்கிறான், அவன் பயப்படும்படியாக எதுவும் இல்லை என்று கூறியதாகவும். இது போல அவ்வப்போது விஜய்க்கு போன் செய்து அஜித் பேசுவது வழக்கம் என்றும் இருவருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.