சிவாஜி மகள்கள் தொடர்ந்த வழக்கு – சென்னையில் உள்ள இந்த பிரபல திரையரங்கம் இணைப்பா ?

0
438
Sivaji
- Advertisement -

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சொத்து வழக்கில் சாந்தி தியேட்டரையும் இணைக்க கொடுத்திருக்கும் மனு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியை யாராலும் மறக்க முடியாது. இவர் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை என்று தான் சொல்லணும்.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்கள் தொடர்பாக அவருடைய மகள்கள் தொடர்ந்து இருக்கும் வழக்கு சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்து வாங்கி இருந்தார். அதனுடைய இன்றைய மதிப்பு 271 ஒரு கோடி ஆகும். சிவாஜிக்கு ராம்குமார்,பிரபு,சாந்தி,ராஜ்வி என்று நான்கு பிள்ளைகள். மேலும், சிவாஜி மறைவுக்குப் பின்பு அவருடைய வாரிசுகள் அவருடைய சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு தெரியாமல் சில சொத்துகளை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து இருக்கிறார்கள். எங்களின் தாய்வழி சொத்துக்களில் கூட எங்களுக்கு பங்கு வழங்கவில்லை. அவர் சேர்த்து வைத்த சுமார் 10 கோடி மதிப்புள்ள 1000 பவுன் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களையும் எங்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டார்கள். இதுபோல கோபாலபுரத்தில் இருந்த வீட்டை 5 கோடி ரூபாய்க்கு பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் விற்றுவிட்டார்கள்.

sivaji

ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள் மூலம் வரும் வாடகையில் கூட எங்களுக்கு எந்த பங்கும் வழங்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் தங்களுடைய சகோதரர்கள் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் பங்கு மற்றும் அதை விற்கும் முயற்சியில் பிரபு மற்றும் ராம்குமார் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் சொத்தை விற்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சிவாஜிகணேசனின் மகள்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்து இருக்கிறது. அதில் சாந்தி மற்றும் ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியிருப்பது, சாந்தி திரையரங்கு வளாகத்தை பிரபு மற்றும் ராம்குமார் இருவரும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் விற்க ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆகவே, சொத்து வழக்கு முடியும் வரை அந்த விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியிருப்பது, சாந்தி தியேட்டர் விற்பனை விவகாரம் ஏற்கனவே முடிந்துவிட்டது.

அதற்கு பிறகுதான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்று கூறி இருக்கிறார். இதனையடுத்து தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், 2010ஆம் ஆண்டே சாந்தி தியேட்டர் விற்பனை ஆகிவிட்டது. கட்டுமான பணிகள் முடிந்த பிறகு தான் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் சாந்தி தியேட்டர் விற்பனை ஆகாத நிலையில் இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அனைத்து வாதங்களையும் கேட்ட கேட்ட பிறகு நீதிபதி, சாந்தி திரையரங்கம் சொத்துக்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை ஒத்தி வைக்க உத்தரவிட்டு இருக்கிறார்.

Advertisement