தவறாக கணித்ததால் ஆறு மடங்கு அதிகம் செலவழித்த சிவாஜி கணேசன் – இன்னிக்கி நிலைமைக்கு பல கோடி இருக்குமே.

0
1342
sivaji
- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜியின் 175வது படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி வெளியிட இருக்கும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. எம் ஜி ஆர் நடித்த காலம் தொடங்கி விஜய் நடித்த கால கட்டம் தொடங்கி பல்வேறு படங்களில் நடித்துள்ளார் சிவாஜி. நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும் ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன்.

-விளம்பரம்-

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பராசக்தி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். கடைசியாக இவர் நடித்த படம் படையப்பா. இந்நிலையில் சிவாஜியின் 175வது படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி வெளியிட இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவாஜி கணேசனின் 175வது படம் அவன் தான் மனிதன். ஒரு நடிகர் 175 படங்களில் நடிப்பது என்பது மிகப்பெரிய சாதனை. அதுவும் அந்த படம் வெற்றி பெற்றால் அதைவிட மகிழ்ச்சி இருக்க முடியாது. அவன் தான் மனிதன் படம் சிவாஜியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

- Advertisement -

அவன்தான் மனிதன் படம்:

மேலும், 1970ஆம் ஆண்டு அவன் தான் மனிதன் படத்தின் கதையை பாலசுப்பிரமணியம் எழுதினார். இந்த படத்தில் சிவாஜி நடிக்க, கே சங்கர் இந்த படத்தை இயக்க இருந்தது. இந்த படத்துக்காக பாலசுப்பிரமணியத்துக்கு அந்த காலத்திலேயே 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், கதையை கேட்ட சிவாஜிக்கு திருப்தி இல்லை. நாயகனின் மனைவி முதலில் இறக்கினார், பிறகு மகள், காதலிக்கும் ஸ்டெனோ காதலை ஏற்றுக் கொள்வதில்லை, ஆத்மார்த்தமான தொழிலாளி போட்டியாக கம்பெனி தொடங்குகிறான், வியாபாரம் தோல்வியுற்றது, சுற்றிலும் கடன், வீட்டை ஏலம் விடுகிறார்கள் என்று உச்சக்கட்ட சோகத்தில் கதை இருக்கிறது. இத்தனை சோகம் ஆகாது என்று சிவாஜி நடிக்க மறுக்கிறார்.

கன்னடத்தில் வெற்றி பெற்ற படம்:

பின் அந்த கதையை கன்னடத்தில் 35 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கஸ்தூரி நிவாசா என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். இந்த படம் ராஜ்குமார் நடிப்பில் வெளி வருகிறது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. இந்த படத்தை பார்த்த சிவாஜி நாம் நினைத்த அளவுக்கு மோசமில்லை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை புரிந்துகொண்டு தமிழில் இந்த படத்தின் ரீமேக்குக்கு நடிக்க ஒத்து கொள்கிறார். ஆனால், இரண்டு லட்ச ரூபாய்க்கு தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜி, முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா நடிப்பில் எடுக்கப்பட்டது தான் அவன்தான் மனிதன் படம்.

-விளம்பரம்-

சிவாஜி கணித்த கணிப்பால் நடந்தது:

சிவாஜி கதையை சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் 25 ஆயிரம் ரூபாய்யில் படம் ஓடிப் போயிருக்கும். ஆனால், சிவாஜி அந்த கதையை புரிந்து கொள்ளாததால் இரண்டு லட்சத்துக்கு கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. மேலும், இந்தப்படத்தில் எம்எஸ்வியின் இசையில் உருவான பாடல்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படம் 1975இல் வெளிவந்தது. அப்போது கண்ணதாசன் கொடிகட்டி பறந்தார். ஆனால், திருலோகசந்தர் தனது சொந்த படங்களில் கண்ணதாசனுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன தொழில்நுட்பத்துடன் அவன் தான் மனிதன்:

மேலும்,ஏ.சி.திருலோகசந்தர் சிவாஜியை வைத்து மட்டும் 25 படங்களை இயக்கியுள்ளார். எம்ஜிஆரின் அன்பே வா படமும் இவர் இயக்கிய தான். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய அவன் தான் மனிதன் படம் வெளியாகி நல்ல விமர்சனம் பெற்று 100 நாட்கள் ஓடியது. இந்த படத்தில் நடித்த மஞ்சுளா, முத்துராமன், ஜெயலலிதா ஆகியோருக்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை கிடைத்தது. இந்நிலையில் இந்த படத்தை நவீன தொழில்நுட்பத்துடன் சென்னை மற்றும் தமிழகமெங்கும் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்து உள்ளார்கள். தற்போது அதற்கான போஸ்டர் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்றைய இளைஞர்கள் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Advertisement