நடிகர் சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரம் தற்போது சுமூகமாக முடிந்திருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்த போது பல இடங்களில் சொத்து வாங்கி இருந்தார். அதனுடைய இன்றைய மதிப்பு பல கோடிகள் இருக்குமாம். சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி என்று நான்கு பிள்ளைகள். சிவாஜி மறைவுக்குப் பின்பு அவருடைய வாரிசுகள் சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர்.

தங்களுக்கு தெரியாமல் சில சொத்துகளை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் விற்று விட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் தேன்மொழி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது தமிழ் சினிமாவில் கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அனைவரும் சிவாஜி குடும்பத்தை தான் சொல்வார்கள். சென்னை தி.நகர் சுமார் ஒன்றரை ஏக்கிராவில் மினி வெள்ளை மாளிகை போல் இருக்கும் 'அன்னை' இல்லத்தில் சிவாஜியோடு அவரின் உடன்பிறப்புகளும் ஒரு காலத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.
சிவாஜி சொத்து விவகாரம்:
மேலும், நடிகர் சிவாஜி நடித்த நிறைய படங்களின் படப்பிடிப்பு கூட அந்த வீட்டில் நடந்திருக்கிறதாம். அந்தக் காலத்தில் வீட்டின் டைனிங் ஹாலில் குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவார்களாம். அதை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்குமாம். அந்த வீட்டை மட்டும் சுமார் 20 க்கு மேற்பட்டோர் பராமரித்து வந்தார்களாம். வேலைக்காரர்கள் தங்குவதற்கு அந்த வீட்டின் வளாகத்திலேயே இடமும் கொடுத்திருந்தார்களாம்.

மகள்களுக்கு வருத்தம்:
சிவாஜி கணேசனின் மகள் சாந்தி கல்யாணமான போன பிறகும் கூட, ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னை இல்லத்திற்கு வந்து விட அனைவரும் ஒன்றாக தான் சாப்பிடுவார்களாம். சூழல் இப்படி இருக்க, மகள்கள் இருவரும் கல்யாணம் ஆகி போன பிறகு மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு சில சொத்துக்களை விற்றது தான் பிரச்சனைக்கு மூலகக்காரணம் என்று சொல்கிறார்கள். சென்னை ராயப்பேட்டையில் இருந்த சிவாஜி ஃபிலிம்ஸ் அலுவலகம், தஞ்சாவூரில் இருந்த சிவாஜி குடும்பத்திற்கு சொந்தமான சில சொத்துக்கள் என்று விற்கப்பட்டதாம். இந்த விஷயங்கள் எதுவுமே தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று சிவாஜியின் மகள்கள் இருவருமே வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
சமாதானத்திற்கு காரணம் :
அதனால் மனக்கசப்பு அதிகமாக அக்கா தங்கைகள் இருவரும் நீதிமன்றம் வரை சென்றிருந்தார்கள். அதாவது சிவாஜுக்கு சொந்தமான சாந்தி திரையரங்கம் கை மாறியது தொடர்பாக சாந்தி, தேன்மொழி இருவருமே வழக்கு தொடர்ந்தார்கள். அந்தச் செய்தி சோசியல் மீடியா முழுவதும் வைரல் ஆனது நாம் அறிந்ததே. இந்நிலையில்தான், சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்சனை, உயில் போலி என்பது போல் மீடியாவில் செய்திகள் வெளியானதால், சிவாஜி மகன்கள் இருவருமே வருத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்களாம்.

சகோதரிகளிடம் பேச்சுவார்த்தை:
இதனால் சகோதரிகளிடம் இது தொடர்பாக சிவாஜி மகன்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சில சொத்துக்களை சாந்தி, தேன்மொழி இருவருக்கும் தர பிரபு மற்றும் ராம்குமார் தற்போது சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ராயப்பேட்டை சிவாஜி ஃபிலிம்ஸ் எதிரில் இருக்கும் இடத்தை அக்கா தங்கைகள் இருவருக்கும் சரி பாதியாய்ப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்களாம். அதோடு இனி சொத்து தொடர்பாக குடும்பத்திற்குள் பிரச்சனை இருக்கக் கூடாது என்றும் பேசியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.






