பட போஸ்டர், அறிவிப்பு எல்லாம் வெளியாகிய பின் ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி – என்ன படம் ? என்ன காரணம் ?

0
998
rajini
- Advertisement -

படத்தின் அறிவிப்பு போஸ்டர் எல்லாம் வெளியாகி ரஜினி படத்திலிருந்து சிவாஜி கணேசன் விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக ஜொலித்தவர் சிவாஜி கணேசன். இவருடைய படைப்பிற்கு யாரும் நிகழவில்லை என்று சொல்லலாம். அதேபோல் சிவாஜிக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.

-விளம்பரம்-

மேலும், சிவாஜி – ரஜினி இருவருமே இணைந்து படிக்காதவன், விடுதலை போன்ற படங்களில் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பின் இவர்கள் இருவரும் இணைந்து மாவீரன் என்ற படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் சிவாஜி – ரஜினி இடம்பெற்ற போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை தமிழன் முதல் 70 எம்எம் ஸ்டீரியோனிக் சவுண்டுடன் பிரம்மாண்டமாக உருவாக்க முயற்சி செய்திருந்தார்கள்.

- Advertisement -

சிவாஜி விலக காரணம்:

ஆனால், படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளியான பிறகு சிவாஜி நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது. காரணம், படிக்காதவன், விடுதலை படத்தின் அளவுக்கு மாவீரனில் அவருக்கு ஸ்கோப் இல்லை என்றும், அப்போது அவர் வேறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததாலும் மாவீரன் படத்திலிருந்து விலகிக்கொண்டார். மேலும், ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மர்த் திரைப்படத்தின் தழுவல் தான் மாவீரன்.

மாவீரன் படம்:

அந்த படத்தில் தாராசிங் அமிதாப்பச்சனின் தந்தையாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தான் சிவாஜியை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். திடீரென்று சிவாஜி அந்த படத்தில் இருந்து விலகியவுடன் இந்தியில் நடித்த தாராசிங்கே தமிழிலும் நடித்திருந்தார். இவர்களுடன் அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, விஜயகுமார், ஆனந்த் பாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

பிரமாண்டமாக படம் உருவாகி வெளியாகியிருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், மாவீரன் படத்துடன் வெளியான புன்னகை படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இரண்டிற்கும் இயக்குனர் ஒருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி ஒரே இயக்குனரின் படம் ஒரே சமயத்தில் வெளியாவதெல்லாம் அபூர்வம். மேலும், மாவீரன் படத்தின் போது சிவாஜி நடித்திருந்த லட்சுமி வந்தாச்சு படமும் வெளியானது.

சிவாஜி-ரஜினி நடித்த படையப்பா படம்:

அந்த படம் குறைவான பட்ஜெட் என்றாலும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு மாவீரன் படம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், ரஜினி ரசிகர்கள் கொண்டாடியிருந்தார்கள். இதனை அடுத்து 13 வருடங்களுக்கு பிறகு படையப்பா படத்தில் ரஜினி – சிவாஜி இணைந்து நடித்திருந்தார்கள். இது சிவாஜி கணேசனின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement