சீமராஜா படத்தை தொடர்ந்து “இன்று நேற்று நாளை” படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மிஸ்டர் லோக்கல் என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்திலும் கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தை கே ஜி ஆர் மற்றும் 24ஏ எம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இளம் நடிகை இவானா கமிட் ஆகியுள்ளார். இவர் பாலா இயக்கிய நாச்சியார் ‘ படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இவானாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் சர்ப்ரைசாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது தயாரிப்புக்குழு. இந்த படத்தை பற்றிய மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதுவரை நமது இணையதளத்தை பின் தொடருங்கள்.