இந்தி திணிப்பு குறித்து கேட்ட பத்திரிகையாளர் – ரஹ்மான் ஸ்டைலில் பதில் அளித்த சிவகார்த்திகேயன்.

0
403
arr
- Advertisement -

இந்தி திணிப்பு குறித்து கேட்ட கேள்விக்கு சிவகார்த்திகேயன் அளித்திருந்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, இவர் , தொகுப்பாளர், சிங்கர், என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த படம் டாக்டர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

- Advertisement -

டான் படம் பற்றிய தகவல்:

அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் டான் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

டான் படத்தின் ட்ரெய்லர்:

மேலும், இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் மே 13ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் புரமோஷனுக்காக படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் இந்தி திணிப்பு குறித்து கேட்ட கேள்விக்கு சிவகார்த்தியன் அளித்து இருந்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் இந்த துணிந்து திணிப்பு குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

ஹிந்தி திணிப்பு ப்ரச்சனை:

அதிலும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் அவர்கள் ஹிந்தி குறித்து கூறி இருந்தது, இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களின் பான் இந்தியா படங்களை எடுக்கிறார்கள். அதை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால், அவை எளிதாக வெற்றி பெறுவதில்லை என்று கூறி இருந்தார். இதனை அடுத்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் ஹிந்தி மொழி குறித்து கமெண்ட் போட்டு இருந்தார். இப்படி இருவரும் மாறி மாறி சோசியல் மீடியாவில் கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

ஹிந்தி திணிப்பு குறித்து சிவா சொன்னது:

இதற்கு தென்னிந்திய பிரபலங்கள் பலரும் கிச்சா சுதீப்புக்கு ஆதரவாக ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஏ ஆர் ரகுமான், சுகாசினி உட்பட பல பிரபலங்கள் இந்தி திணிப்பு குறித்தும் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஹிந்தி திணிப்பு குறித்து சிவாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் இந்தி திணிப்பு குறித்து பேச மறுத்து இருக்கிறார். பின்தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் தமிழில் பேசுகிறேன். எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். நன்றி என்று சொல்லி கிளம்பி இருக்கிறார்.

தமிழ் மொழி குறித்து ரஹ்மான் :

தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஏ ஆர் ரஹ்மான் இந்தி தணிப்பு குறித்து சர்ச்சை கிளம்பிய போது தமிழ் தாயின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தது பேசுபொருளானது. அதே போல பத்திரிகையாளர் ஒருவர் இந்தி தான் நாட்டின் இணைப்பு மொழியா என்று கேட்டற்கு தமிழ் தான் இணைப்பு மொழி என்று கூறிவிட்டு சென்றார். தற்போது ரகுமான் போலவே சிவகார்த்திகேயனின் கூறி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.

Advertisement