சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 17 ஆம் தேதி வெளியாகியானது மிஸ்டர் லோக்கல் திரைப்படம். ஓகே ஓகே எஸ் எம் எஸ் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
மிஸ்டர் லோக்கல் படத்தை தொடர்ந்து சிவா. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்துள்ளார் இன்று சென்னையில் நடைபெற்ற ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது பேசிய சிவகார்த்திகேயன், “மிஸ்டர். லோக்கல் திரைப்படம் தோல்வி படம்தான்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர் ”மிஸ்டர். லோக்கல் திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்ததா? இல்லையா? என்பதை பற்றி நான் பேசவில்லை. தொழில்ரீதியாக அனைவருக்கும் நான் லாபமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.
நட்பு, துரோகம் கலந்ததுதான் என்னுடைய பயணம். தோல்வியிலும் என்னுடனே இருக்கும் என் ரசிகர்கள்தான் என் பலம். இனி வரும் திரைப்படங்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரியாகவே இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.