ரஜினிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தான் ! விஜய், அஜித் இல்லை – விவரம் உள்ளே

0
994
- Advertisement -

தனது முதல் படத்தில் இருந்து சிவாகார்த்திகேயன் காட்டில் அடைமழை தான். அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் கொடுத்து பல கோடி மார்க்கெட் உள்ள நடிகராக மாறிவிட்டார். தற்போது வேலைக்காரன் படம் அவருக்கென ஒரு ட்ராக்கை உருவாக்கி உள்ளது.thala-ajith-vijay

தற்போது பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சீமாராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அடுத்து, ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர்
ரவிக்குமார் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு ரஜினியின் 2.0 படத்தில் வேலை செய்த டெக்னீசியன்கள் வேலை செய்ய உள்ளனர். முதலில் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து பெருமை சேர்க்கவுள்ளார்.

- Advertisement -

sivakarthikeyan

மேலும், 2.0 படத்தில் வேலை செய்த நீர்வ் ஷா சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படி ரஜினியின் 2.0 படத்தில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்திலும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement