10 ஆண்டுகளுக்கு முன் சிம்பு பட போஸ்டரை பகிர்ந்த நெல்சன், sk போட்டுள்ள கமன்ட்

0
33119
vettaimannan
- Advertisement -

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘டாக்டர் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பிரியங்கா, யோகிபாபு,இளவரசன், தீபா, அர்ச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்திற்கு அனிரூத் இசை அமைத்து உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவத்தில் பணிபுரியும் ஒரு மருத்துவராக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Vettai Mannan Movie Stills! - Kollywood Gossips

குழந்தைகளை கடத்தி விற்கும் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் குழந்தையை ஒரு மருத்துவராக இருக்கும் சிவகார்த்திகேயன் எப்படி திட்டம் போட்டு அந்த குழந்தையை காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் டிரைலரை பார்த்து பலரும் இந்த திரைப்படத்தை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக எதிர்பார்த்த நிலையில் இந்த படமும் கோலமாவு கோகிலா போல ஒரு டார்க் காமெடி படமாக தான் இருக்கிறது.

இதையும் பாருங்க : கேலிக்கு உள்ளான நயன்-ரஜினி செல்பி – ஏன்னு பாருங்க(எப்படி தான் கண்டு புடிக்கிறாங்களோ)

- Advertisement -

இருப்பினும் ஒரு முழு நீல காமெடி படமாக இந்த படம் அமைந்து உள்ளது. இந்த படத்தை இயக்கிய நெல்சனும் , சிவகார்த்திகேயனும் பல ஆண்டுகளாக நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை நெல்சன் தான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் ஒரு இயக்குனராக அறிமுகமாக வேண்டியது சிம்பு படத்தில் தான்.

இயக்குனர் நெல்சன் 10 ஆண்டுக்கு முன்னரே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தின் பல போஸ்டர்கள், டீசர் என்று வந்த நிலையில் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த படம் வெளியான போது இந்த படத்தை பற்றிய அறிவிப்பை நெல்சன் பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் ‘அண்ணே ஆல் தி பெஸ்ட், கலக்குங்க’ என்று பதிவிட்டிருக்கிறார் .தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement