எப்படி இருக்கிறது சிவகார்த்திகேயனின் ‘Don’ – முழு விமர்சனம் இதோ.

0
202
don
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அதோடு இது தான் இவரின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் டான் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஒரு கிராமத்தில் சமுத்திரக்கனி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவர் தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், பெண் குழந்தைக்கு பதிலாக சமுத்திரக்கனிக்கு மகனாக சிவகார்த்திகேயன் பிறக்கிறார். எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்ததால் சிவகார்த்திகேயன் மீது அதிக ஈடுபாடு காட்டாமல் கண்டிப்போடு வளர்க்கிறார் சமுத்திரக்கனி. அதுமட்டும் இல்லாமல் வாழ்க்கையில் சிவகார்த்திகேயன் சாதிக்க மாட்டான் என்று சமுத்திரகனி நினைக்கிறார். இதனால் தன் தந்தையின் முன் சாதித்து காட்ட வேண்டுமென சிவகார்த்திகேயன் நினைக்கிறார்.

- Advertisement -

அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் என்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார். அங்கு ஆசிரியராக எஸ் ஜே சூர்யா இருக்கிறார். பின் சிவகார்த்திகேயனுக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் எஸ் ஜே சூர்யா தடுக்கிறார். இறுதியில் எஸ் ஜே சூர்யா வின் தடைகளை தாண்டி சிவகார்த்திகேயன் என்ஜினியரிங் முடித்தாரா? தன் அப்பா நினைத்தது போலில்லாமல் வாழ்க்கையில் சாதித்து காட்டினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

வழக்கம்போல் சிவகார்த்திகேயன் படத்தில் தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நடனம், காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்திலுமே சிவா ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக பள்ளிப்பருவ காட்சிகளில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மனதில் நின்று விட்டார் என்றே சொல்லலாம். தற்போது படிக்கும் மாணவர்களின் பிரதிபலிப்பாகவே சிவா ஜொலித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் சிவகார்த்திகேயன்- பிரியங்கா இருவரின் கெமிஸ்ட்ரியும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இவர்களை அடுத்து படத்திற்கு பெரிய பலமாக எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு உள்ளது. பல இடங்களில் எஸ் ஜே சூர்யா நடிப்பு கைதட்டல் வாங்கி இருக்கிறது. மேலும், கண்டிப்பான அப்பாவாக சமுத்திரக்கனி எல்லோர் மனதிலும் நின்றிருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, முனீஸ், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே விஜய் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

மாணவர்களின் கல்லூரி படிப்பு, அப்பா மகன் பாசம் ஆகியவற்றை தெளிவாக காண்பித்திருக்கிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. இது முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு படத்தின் கதையை கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது. அந்தளவிற்கு உணர்வுபூர்வமாக இருக்கிறது. வழக்கம்போல் அனிருத் இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார். படத்திற்கு பின்னணி இசையும், ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு டான் படம் நல்ல மாஸாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

நிறை :

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா நடிப்பு சிறப்பு.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

திரைக்கதையை இயக்குநர் கொண்டு சென்ற விதம் சிறப்பு.

படத்தில் காமெடி, காதல், ரொமான்டிக் எல்லாமே சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

குறை :

சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் தவிர மற்றபடி சொல்லும்படி அளவிற்கு பெரிதாக குறைபாடுகள் எதுவும் இல்லை. மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று கொண்டாடக் கூடிய படமாக டான் இருக்கிறது.

மொத்தத்தில் டான்- டாப்பில் வருவார்.

Advertisement