பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து தான் ஒட்டுமொத்த இந்தியாவும் பரபரப்பாக பேசி கொண்டு உள்ளது அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் தூக்கு போட்டு இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவும் நெபோடிஸம் தான் காரணம் என்றும் சமூக வலைதளத்தில் சர்ச்சை கிளம்பி உள்ளது. வாரிசு என்பது அரசியலில் மட்டும் கிடையாது, சினிமாவிலும் அதன் தாக்கம் உள்ளது. பொதுவாகவே பிரபல நட்சத்திரங்கள் சினிமா உலகில் தனக்கு பிறகு தங்கள் பிள்ளைகளையே பெரிய நடிகர்களாக உருமாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த நிலை இந்தியா முழுவதும் நடைபெற்று வருவகிறது.
https://www.youtube.com/watch?v=6FzTTF1WoQ0
மேலும், பல வாரிசு நடிகர்கள் சேர்ந்து தான் சுஷாந்த் சிங்க்கு மன அழுத்தத்தை உண்டாக்கி இவ்வாறு செய்து விட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலைமை தமிழ் சினிமாவில் பிரபல நடிகருக்கு ஏற்படுத்தியுள்ளனர். தமிழ் சினிமாவில் டிவி நிகழ்ச்சி மூலம் தன் பயணத்தை தொடங்கி தற்போது சினிமாவில் பெரிய ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
ரெமோ படத்திற்கு பிறகு தான் இவருடைய மார்க்கெட் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்தது என்று சொல்லலாம். ஆனால், ரெமோ படத்தை வெளியிட எவ்வளவு சதி செய்ய முடியுமோ அவ்வளவு சதி செய்துள்ளார்கள் திரைத்துறையைச் சேர்ந்த வாரிசுகள். அதற்காக சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு முறை மேடையில் அழுது உள்ள வீடியோ கூட இன்னும் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. மேலும், இன்று பாலிவுட் நடிகர் மன அழுத்தம் காரணமாக இறந்ததை பார்த்து சிவகார்த்திகேயன் அன்று அழுததற்கு தற்போது ஆதரவு பெருகி வருகிறது.
சினிமாவில் இருப்பவர்கள் மட்டுமே சினிமாவில் வளர வேண்டும் எனவும், புதிதாக யார் வந்தாலும் அவர்களை அசைத்துப் பார்ப்பது தான் அவர்களுக்கு வேலை என்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இந்த நிலைமை மாற வேண்டும். திறமை உள்ளவர்களுக்கு எங்கு சென்றாலும் இடம் உண்டு என்பதை ஏற்படுத்த வேண்டும்.





