தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் மோசடி வழக்கு போட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் மிஸ்டர் லோக்கல்.

இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோஸ் கிரீன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்தது. மேலும், இந்த படத்தில் நடிப்பதற்காக நடிப்பதற்கு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி சம்பளம் பேசப்பட்டது. ஆனால், 11 கோடி வரை தான் சம்பளமாக தயாரிப்பாளர் ராஜா கொடுத்திருக்கிறார். மீதமுள்ள சம்பளத்தை கொடுக்கவே இல்லை. இதை அடுத்து சிவகார்த்திகேயன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர பெற்றது.
சிவகார்த்திகேயன் விவகாரம்:
பின் இந்த வழக்கு விசாரணையின் போது இரு தரப்பினருமே சமரசம் செய்து கொள்வதாக கூறியிருந்தார்கள். இதை அடுத்து 2023 ஆம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. இருந்தாலும் சொன்னபடி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சிவகார்த்திகேயனுக்கு நிலுவை பணத்தை கொடுக்கவே இல்லை. அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்ட 11 கோடிக்கான டிசிஎஸ் தொகையை ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை.

ஞானவேல் ராஜா சர்ச்சை:
இதனால் வருமான வரித்துறை சிவகார்த்திகேயன் வங்கி கணக்கிலிருந்து 91 லட்சத்தை பிடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிவகார்த்திகேயன் தரப்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் தொடர்ந்த மனுவில், என்னுடைய நிலுவை சம்பளம் கிடைக்கும் வரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தற்போதைய திரைப்படங்களான ரெபெல், சியான் 61, பத்து தல ஆகியவற்றின் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும்.
https://www.youtube.com/watch?v=uu2Hi5S_wlM
மீண்டும் மனுதாக்கல்:
அதேபோல் என்னுடைய பிரச்சனையை முடிவுக்கு வரும் வரை அந்த படங்களுடைய ஓடிடி தளங்களுக்கான விற்பனை உரிமம், திரையரங்கம் விநியோகஸ்தர்கள் சார்ந்த பணிகளையும் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வர இருக்கிறது. இதை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






