சிவகார்த்திகேயனின் மாவீரன் சூட்டிங் திடீரென்று நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்கள்:
மேலும், டாக்டர், டான் போன்ற படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த பிரின்ஸ் படம் கடந்த சில வாரங்களுக்கு முன் தான் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் சத்யராஜ், மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவி தான் அயலான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார்.
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்:
மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மாவீரன் படம்:
இந்த படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாவீரன் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, படத்தில் சில காட்சிகளை சிவகார்த்திகேயன் மாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறராம். அதற்கு இயக்குனர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
ஷூட்டிங் நிறுத்தம்:
மாவீரன் பட இயக்குனருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மாவீரன் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஷூட்டிங் நின்றதற்கான காரணம் என்ன? என்பதை பற்றி பட குழு விளக்கம் அளித்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.