பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த செய்தி தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதோடு தற்போது கோடிகளை சம்பளம் வாங்கும் மனிதர்களில் ஒருவராக சிவா இருக்கிறார்.
மேலும், கடைசியாக ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘அயலான்’ படத்தில் இவர் நடித்துள்ளார். ஏலியன் குறித்து உருவாக்கப்பட்ட இப்படம் பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளிவந்தது. தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் சீமானை சந்தித்துள்ள செய்தி தற்போது பேசும் பொருள் ஆகியுள்ளது.
சிவா சீமான் சந்திப்பு:
இந்த சந்திப்பு அன்பை வெளிப்படுத்தும் வகையில் நேர்ந்தது என்று தெரிகிறது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சீமான் மேல் பெரிய மரியாதை மற்றும் மதிப்பு இருக்கிறதாம். அதனால் தான், சிவா நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் சிறைக்குப் போகும் காட்சியில், ‘இங்கதான் சீமான் அண்ணன், மன்சூர் அலிகான் அண்ணனெல்லாம் இருக்காங்க. அவங்க எல்லாம் நமக்கு சீனியர்’னு சிவா சொல்லி இருப்பாராம். அதுபோல், சிவாவும் சீமானும் அண்ணன் தம்பி போல் பழகுவார்களாம்.
பிரபலங்களுக்கு நன்றி சொன்ன சீமான்:
அந்தவகையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவில், தனித்துப் போட்டியிட்டு 8.2% வாக்குகளை பெற்றதால் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியது. அதற்காக நடிகர் ரஜினிகாந்த், திருமாவளவன், சசிகலா, சேரன் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் சீமானுக்கு அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த, ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூட, ‘ஆருயிர் இளவல் சிவகார்த்திகேயனுக்கு நன்றி’ என்றும் சீமான் தெரிவித்திருந்தார்.
சிவாவுக்கு விருந்து;
அவரைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை தனது வீட்டிற்கு சீமான் விருந்துக்கு அழைத்திருக்கிறார். சிவாவுக்கு பிடித்த உணவுகள் சமைத்து பரிமாறப்பட்டதாம். சீமானின் மகன் மாவீரனை தூக்கி மடியில் உட்கார வைத்துக்கொண்டு சிவா கொஞ்சி விளையாடினாராம். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் ஜாலியாக போனதாம்.. அதேபோல் முழுக்க முழுக்க அன்பின் காரணமாக மட்டுமே இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்றும், இதில் எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை என்றும் தெரிகிறது.
சீமான் குறித்து:
தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய பிரபலமான இயக்குனர், நடிகராக திகழ்ந்தவர் சீமான். அதோடு இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பல ஆண்டு காலமாக இருக்கிறார். ஒருங்கிணைப்பாளராக நலன் கருதி இவர் பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார். இப்படி இவர் அரசியலில் பிஸியாக இருந்தாலும் படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சீமான் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘முந்திரிக்காடு’. இந்தப் படத்தில் சீமான் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.