சிவகார்த்திகேயன் படத்துக்கு விஜய்யின் இந்த பாடலின் தலைப்பா..?

0
314

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான “சீமராஜா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற தவறியது. மோசமான விமர்சங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் இந்த வாரமே திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Sivakarthikeyan

- Advertisement -

சீமராஜா படத்தை தொடர்ந்து “இன்று நேற்று நாளை” படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “இரும்புத்திரை” படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்திலும் தற்போது சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளார்.

அதே போல தமிழில் “எஸ் எம் எஸ் ,ஓகே ஓகே,வி எஸ் ஓ பி” போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்திலும் தற்போது நடித்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாகி நடிக்கவிருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு விஜய்யின் “தெறி” படத்தில் இடம்பெற்ற “ஜித்து ஜில்லாடி” என்ற பாடலின் வரியைதான் தலைப்பாக வைத்துள்ளனர் என்று கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள இயக்குனர் ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு இன்னும் என்ன தலைப்பு வைப்பதென்று முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில் படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபுர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement