தொலைகாட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் தனது கடின உழைப்பால் இன்று சினிமாவில் தனக்கென்று ஒரு நல்ல இடத்தை பிடித்து இருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.
இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டு இருக்கிறார். இவர் மெரினா திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வந்து வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
டாக்டர் படம்:
இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்திருந்தது. இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவுக்கு சிவகார்த்திகேயன் அளித்து உள்ள பதில் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நண்பன் படம் விழாவில் சிவா-சங்கர்:
ஷங்கர்– விஜய் கூட்டணியில் வெளியாகியிருந்த படம் நண்பன். இந்த படத்தின் 100வது நாளை கொண்டாடும் விழாவிற்காக பல நடிகர்கள் பங்கு பெற்று இருந்தார்கள். அப்போது இந்த விழாவை சிவகார்த்திகேயன், நீயா நானா கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார்கள். அதில் சிவகார்த்திகேயன், இயக்குனர் சங்கர் மற்றும் அவரது மனைவியுடன் உரையாடுவது போன்று அந்த வீடியோவில் உள்ளது. அந்த வீடியோவில் கோபிநாத் உங்களுடைய மனைவி வந்திருக்கிறார்களா என்று சங்கரிடம் கேட்கிறார். சங்கரும் வந்திருக்கிறார் என்று சொன்னவுடன் சங்கரருடைய மனைவி எழுந்து நிற்கிறார். உடனே கோபிநாத் நீங்கள் உட்காருங்க என்று சொல்கிறார்.
வீடியோவில் சிவா சொன்னது:
அதற்கு சிவகார்த்திகேயன் கணவன் இங்கே நிற்பதால் அவர்கள் எப்படி உட்காருவார்கள் தமிழ் நாட்டு கலாச்சாரம் என்று சொல்லி உங்கள் கணவர் கார் வாங்க சென்றால் 10 காரையும் பேக் செய்வாரா? என்று கேலி செய்கிறார். இப்படி சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதை பார்த்த சிவகார்த்திகேயன் ‘இந்த நினைவுகளை என்றும் மறக்க முடியாது. என் வாழ்க்கையில் ரொம்ப ஸ்பெஷலானது’ என்று பதிவிட்டிருந்தார். இப்படி சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவை பலரும் ஷேர் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ரசிகர் போட்ட டீவ்ட்:
அதில் ரசிகர் ஒருவர், சும்மா கிடைக்கல இந்த இடம். எவ்வளவு தடைகளைத் தாண்டி, கோபி அண்ணா கூட அந்த மேடையில் ஸ்கோர் பண்ண பாக்கறாரு. அதையும் தாண்டி கிளாப்ஸ் வாங்குறது லேசுபட்ட காரியம் இல்லை. அதனால் தான் சிவா அண்ணா இந்த இடத்தில் உயரத்தில் இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்தியனின் டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது அயலான், டான் என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.