தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் சேயோன். இது இவருடைய 26வது படம். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இவர்களுடைய கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த அமரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சேயோன் படத்தை இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார்
சேயோன் படம்:
இவர் ராதிகா நடித்த தாய்க்கிழவி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அந்த படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்தார். அதற்குப் பிறகுதான் சிவகார்த்திகேயன்- சிவகுமார் இணைந்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் கிராமத்து நாயகனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்றுதான் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.

சேயோன் படத்தில் சேர்ந்த நட்பு:
இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பர்கள் இருவர் இணைந்து இருக்கிறார்கள். அதாவது, சந்தோஷ் நாராயணன்- சிவகார்த்திகேயன் இருவருமே கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள்.சிவாவிற்கு சீனியர் தான் சந்தோஷ். இருவருமே திருச்சியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் தான் படித்தார்கள்.
View this post on Instagram
சந்தோஷ் நாராயணன் பேட்டி:
இருந்தாலுமே இதுவரை சிவகார்த்திகேயன்- சந்தோஷ இணைந்து எந்த படத்திலும் பணியாற்றதில்லை. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சந்தோஷ் நாராயணன், 24 ஆண்டுகளுக்கு பிறகு
இந்த படத்தில் இணைந்திருக்கிறோம். அப்பாவி கல்லூரி பிள்ளைகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு கலையை உருவாக்கினோம். தகுந்த காத்திருக்கு பிறகு உனக்காக பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன் சிவா. கமலஹாசன் சாரோட குழுவில் வேலை செய்வதற்கு எனக்கு இன்னும் ஆர்வமாக இருக்கிறது. என்னுடைய முழு இதயத்துடன் உங்களை ஆதரிப்பேன் என்று கூறி இருக்கிறார்.






