ரஜினி படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலகியது ஏன் ? அவருக்கு பதில் வாரிசு நடிகர்.

0
378
- Advertisement -

ரஜினி படத்திலிருந்து சிவகார்த்திகேயன் விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Sk வந்தது எப்படி :

அதாவது, தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து ஐஸ்வர்யா அவர்கள் படம் ஒன்றை இயக்குகிறார். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு முதலில் இளம் ஹீரோ ஒருவரை கதாநாயகனாக நடிக்க வைக்க ஐஸ்வர்யா முடிவு செய்திருந்தார். அதற்கு ரஜினி தரப்பிலிருந்து சிவகார்த்திகேயனிடம் பேசலாம் என்று கூறியிருந்தார்கள். இதனை அடுத்து லைக்கா நிறுவனமும் நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.

Sk நடிக்க முடியாத காரணம் :

அப்போது இந்த படத்தில் ரஜினிகாந்த் 20 நிமிடம் மட்டுமே வருவார் என்று கூறியிருந்தார்கள். ரஜினி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் விருப்பப்பட்டாலும், ஓகே என்று சொன்னாலும் கால்ஷீட் இல்லாததால் அவர் அமைதியாக நடிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தாராம். தற்போது அந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Skவின் அடுத்தடுத்த படங்கள் :

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. தற்போது இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

Advertisement