தன்னுடைய காதல் தோல்வி குறித்து மனம் திறந்து சிவகார்த்திகேயன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:
இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.
இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய முதல் காதல் தோல்வி குறித்து சிவகார்த்திகேயன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் ஒரு பெண்ணை ரொம்ப சின்சியராக காதலித்திருந்தேன். ஆனால், அது ஒன் சைட் லவ் தான்.
முதல் காதல் தோல்வி:
அந்த காதல் கடைசி வரை கைக்கூடாமல் போய்விட்டது. அந்தப் பெண் வேறு ஒருவரை காதலித்திருந்தார். இதனால் என்னுடைய காதலும் தோல்வியில் முடிந்தது. என்னுடைய வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு காதல் அதுதான். அதற்குப்பின் நான் விஜய் டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த பெண்ணை ஒரு ஷாப்பிங் மாலில் பார்த்தேன். நான் அவரிடம் பேசவில்லை. ஆனால், அந்த பெண் வேறு ஒரு பையனோடு வந்திருந்தார்.
பராசக்தி படம்:
அவர் அந்த பெண் காதலித்த பையன் இல்லை. அதைப் பார்த்ததுமே எனக்கு ரொம்ப சந்தோஷம். நமக்கு கிடைக்காத பெண் அவனுக்கும் கிடைக்கவில்லை என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டேன் என்று கூறியிருக்கிறார். தற்போது சிவா அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை Dawn Pictures and Red Giant Movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சிவா படங்கள்:
அதிகப் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்காலிகமாக இந்த படத்திற்கு எஸ் கே 21 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தினுடைய டைட்டில் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் திரைக்கு வர இருக்கும் என்று கூறப்படுகிறது.