தனது மகளுடன் மிகவும் சிம்பிளாக பொது பேருந்தில் சென்றுள்ள சிவகார்த்திகேயன் – லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

0
1429
sk
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்களின் குழந்தைகைகள் சினிமாவில் கால் பதித்து வருகின்றனர். விஜய் மற்றும் ஜெயம் ரவி போன்றவர்களின் குழந்தைகள் சினிமாவில் முகம் காண்பித்துவிட்ட நிலையில் சமீபத்தில் கூட அருண் விஜய்யின் மகன் சூர்யா தயாரிப்பில் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் ‘கனா’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர் என்ற பன்முக திறமை கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் பாடகருமான அருண் ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். இதே படத்தில் தான் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் மூலம் தனது மகளை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார் சிவகார்த்திகேயன்.

- Advertisement -

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. அதே போல யூடுயூபில் கூட பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது இந்த பாடல். சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவை ரசிகர்கள் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சென்று இருந்தார்.

அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் பொது பேருந்தில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் நடிகர் சிவகார்திகேயன் சன் தொலைக்காட்சியில் ‘சும்மா கிழி’ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement