15 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி படம், 15முறை தியேட்டரில் பார்த்ததாக Sk போட்ட ட்வீட் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
495
sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டங்களில் தொடங்கி இன்று வரை இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதோடு இவருடைய நடிப்பு திறமைக்காக கடந்த ஆண்டு தேசிய விருதும் கிடைத்து இருந்தது. இதற்கு பலரும் பாராட்டி இருந்தார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார். இதற்கான வீடியோ எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள்.

இதையும் பாருங்க : அவருக்கு எந்த பெரிய பிரச்சனையும் இல்ல, ஆனா, இதை நினைத்து ரொம்ப வருந்தினார் – திடீரென்று இறந்த தன் தந்தை குறித்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட ஜெனி.

- Advertisement -

சிவாஜி படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது, ஷங்கர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த படம் சிவாஜி. இந்த படத்தில் ரஜினிகாந்த், மணிவண்ணன், விவேக், ஸ்ரேயா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

ரஜினிகாந்த் வாய்ஸ் மெசேஜ் :

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படம் வெளியாகி கிட்டதட்ட 15 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து ரஜினிகாந்த் அவர்கள் ஏவிஎம் புரொடக்சன்சு, இயக்குனர் ஷங்கருக்கும், படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தற்போது இது தான் சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் டீவ்ட்:

மேலும், சிவாஜி படக்குழுவினர் அனைவரும் 15வது ஆண்டு நிறைவடைந்தை கொண்டாடி வருகிறார்கள். இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயனும் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நான் சிவாஜி படத்தை 15 முறை தியேட்டரில் பார்த்து இருக்கிறேன். சூப்பரான மாசான படம் என்று தலைவரைப் பற்றி புகழ்ந்து பேசி இருந்தார்.

கிண்டலுக்குள்ளான சிவா டீவ்ட்:

இப்படி சிவகார்த்திகேயன் பதிவிட்ட டீவ்ட் சோஷல் மீடியாவில் வைரலானது அடுத்து நெட்டிசன்கள் பலரும், நீங்கள் தலைவர் ரசிகர் என்று தெரியும். ஆனால், இப்படி எல்லாம் புழுக்காதீர்கள். 15 முறை நீங்கள் படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். வாய் இருக்கு என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசாதீர்கள் என்று சிவகார்த்திகேயன் டுவிட்டை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகிறார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது

Advertisement