நான் காக்கி சட்ட குடும்பத்தை சேர்ந்தவன் – போலீஸ் ஆவனும்னு ஆச பட்றவங்க இங்க வந்து பாருங்க.

0
812
sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது என்றே சொல்லலாம். இது குறித்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே சிவகார்த்திகேயன் அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியத்தை பார்வையிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, காவல்துறை அருங்காட்சியத்தை பற்றி நான் சமீபத்தில் தான் கேள்விப்பட்டேன். கேள்விப்பட்டதும் காவல்துறை அருங்காட்சியத்தில் என்ன இருக்கும் என்பது எனக்கு முதல் கேள்வியாக இருந்தது. எனக்குள் போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நானும் காக்கிசட்டை குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். என்னுடைய அப்பா சிறைத் துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அதனால் எனக்கு காவல்துறை மீது தனி ஈர்ப்பும் பிரமிப்பும் உண்டு.

இதையும் பாருங்க : ‘சாரதி செல்லம்மா’ – பாரதி கண்ணம்மா சீரியலை வச்சி செய்த Tsk மற்றும் சுனிதா – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

நமது ஊரில் காவல்துறை தொடங்கப்பட்டதிலிருந்து இப்போது வரை எப்படியெல்லாம் வளர்ந்துள்ளது என்பதை பொருள்களாக இங்கு முழுமையாக வைத்துள்ளார்கள். அதைத் தாண்டி பார்க்க வருபவர்களுக்கு அனைத்தையும் விளக்கமாக விளக்கியும் வருகிறார்கள். இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நமக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும் அதற்கு பின்னால் ஒரு கதைசொல்லி அழகாக எடுத்துரைக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள், காவல்துறை அதிகாரியாக ஆனவர்கள் உள்ளிட்ட அனைவருமே இந்த அருங்காட்சியகத்தை வந்து பார்க்கவேண்டும். காவல்துறை அதிகாரியாக ஆக வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் இங்கு தெளிவாக சொல்கிறார்கள்.

இதை நீங்கள் வந்து பார்த்தால் இதன் பாரம்பரியம் என்னவென்று தெரியும். மேலும், காவல் துறை அதிகாரியாக ஆக நினைப்பவர்கள் மட்டும் இல்லாமல் பொது மக்களும் தங்களுடைய குழந்தைகளை கூட்டிக்கொண்டு வந்து இதைப் பார்க்கவேண்டும். காவல்துறை பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் மிக அழகாகச் சொல்கிறார்கள். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இந்தியாவிலேயே இது சிறந்த இடம் என்று சொல்லித்தான் என்னை அழைத்தார்கள். இங்கு வந்து பார்த்தபோது தான் உண்மையிலேயே இந்தியாவிலேயே சிறந்த இடமாக காவல்துறை அருங்காட்சியம் இருக்கிறது அனைவருமே காவல்துறை அருங்காட்சியத்தை வந்து பார்வையிடுங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement