வாக்கில்லாமல் வாக்களித்த சிவகார்திகேயன்.! தேர்தல் அதிகாரி தீவிர நடவடிக்கை.!

0
187
Sivakarthikeyan

தமிழகத்தில் கடந்த 18ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலில் பல்வேறு நடிகர் நடிகைகளும் வாக்களித்தனர் ஆனால் நடிகர்களில் ரோபோ ஷங்கர் ரமேஷ்கண்ணா சிவகார்த்திகேயன் போன்றவர்களின் பெயர்கள் வாக்கு பட்டியலில் இல்லை என்ற சர்ச்சை கிளம்பியது.

Image result for சிவகார்த்திகேயன்

வாக்கு பட்டியலில் தனது பெயர் இல்லாததால் நடிகர் ரமேஷ் கண்ணா வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்தார். அதேபோல நடிகர் சிவகார்த்திகேயன் எப்படியோ தேர்தல் அதிகாரிகளுடன் உதவியோடு நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் வாக்களித்தார்.

இதையும் பாருங்க : பிரஜன் மனைவி சான்றாவா திருமணத்திற்கு முன் இப்படி எல்லாம் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.!

- Advertisement -

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் எப்படி வாக்களித்தார் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் அதிகாரிகள், ”சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் பாகம் 303 வாக்காளர் பட்டியல் வரிசை எண் 703ல் அவரின் பெயர் எழுதப்பட்டு சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். நீக்கப்பட்ட பெயர் பட்டியலில், சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால் இந்தச் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில்  நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு இல்லாமல் வாக்களித்த விவகாரத்தில், அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தவிர ஒருசிலரும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் விடுபட்டிருந்தது. அத்தகைய நபர்கள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில், சிவகார்த்திகேயனுக்கு மட்டும் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement