தமிழ் சினிமா உலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கன்னக்குழி அழகே என்கிற ஆல்பம் பாடலை எழுதி உள்ளார். இந்த நிலையில் நடிகர் அருண்ராஜா காமராஜ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் தன்னுடைய கல்லூரி மற்றும் நண்பர்கள் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் அதில் கூறி இருப்பது, நான், சிவா, திபு எல்லாருமே கல்லூரி படிக்கும் போதே நல்ல பழக்கம். நாங்க மூணு பேரும் ஒரே டிபார்ட்மென்ட் தான். கல்லூரில் திபு டேபிள் மீது தாளம் போட ட்யூனுக்கு ஏத்தமாதிரி நான் பல பாடல்கள் எழுதியிருக்கேன். அப்போதே நான் வரிகளை எப்படி ட்யூனுக்குள் உட்கார வைப்பது என்று கற்று கொண்டேன். மேலும், நான் கல்லூரி படிக்கும் போதே பல பாடல்கள் எழுதி இருக்கிறேன். பிறகு அதை நான் இண்டிபெண்டன்ட் ஆல்பமாக வெளியிட்டேன்.
இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின்னரும் கிளாமர் மாறாத சயீஷா. நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம்.
நாங்க மூணு பேரும் ஒண்ணா சேர்ந்ததற்கு கல்லூரி விழா மற்றும் கிரிக்கெட் தான் காரணம். திபு கிரிக்கெட் விளையாட வர மாட்டான். நானும், சிவாவும் தான் அதிகமாக கிரிக்கெட் விளையாடுவோம். கிரிக்கெட் தான் எங்களுக்குள்ள புரிதலை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சிவா தான் எங்க டீமோட கேப்டன். எங்கள் நட்பு உருவானதற்கு அடித்தளமே கிரிக்கெட் தான்.
இப்போ சிவா கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் குறைந்து விட்டது. போன வருஷம் வரைக்கும் தொடர்ந்து விளையாடிக்கிட்டுத் தான் இருந்தோம். சிவாவுக்கு தினமும் ஷூட்டிங் இருக்கும். அதனால் அடி ஏதாவது பட்டால் ஷூட்டிங் போவது கொஞ்சம் சிக்கல் ஆகி விடும் என்று நினைத்து டென்னிஸ் பந்தில் விளையாடுவோம். டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடுறது ரொம்ப கஷ்டம். ஆனால், சிவா டென்னிஸ் பந்திலும் சூப்பரா விளையாடுவான் என்று புன்னகையுடன் கூறினார்.