திருப்பதிக்கு செல்லும் ஏழை & பணக்காரன். சிவகுமாரின் ஜருகண்டி சர்ச்சை இதான்.

0
2096
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறந்தவர் நடிகர் சிவகுமார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகுமார் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தவறுகள் நடைபெறுவதாகவும் அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் பேசி இருந்தார். இப்படி இவர் பேசிய வீடியோ குறித்து தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பி இருந்தார். தமிழ் மாயன் அளித்த தகவலின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் அளித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி ...

மேலும், தேவஸ்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடித்தி வருகிறது. அந்த எஃப்.ஐ.ஆர் அறிக்கையில் சிவகுமார் அப்படியென்ன பேசினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிவகுமார் கூறியது, ஒரு ஏழைப் பக்தன் 48 நாள்கள் விரதமிருந்து காட்பாடியிலிருந்து நடந்தே திருப்பதி கோயிலுக்குச் செல்கிறான்.

- Advertisement -

இவன் நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகு சாமியைத் தரிசனம் செய்கிறான். கோயிலில் அவனை ஜரகண்டி ஜரகண்டி என சொல்லி மூங்கில் குச்சியில் அடித்து விரட்டுகிறார்கள். அதுவே ஒரு பணக்காரன் திருப்பதிக்கு சென்றால் அவன் விடுதி அறையில் தங்குகிறான். அன்றிரவு அவன் மது போதையில் இருந்துவிட்டு காலையில் குளிக்காமல் கோயிலுக்குள் செல்கிறான்.

சிவகுமார் மீது பதியப்பட்ட Fir காபி

அவனுக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. கால்நடையாக நடந்துசெல்லும் பக்தர்களை தேவஸ்தானம் மதிப்பதில்லை என்று சிவகுமார் பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ யூடியூபில் வெளிவந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement