தன்னுடைய ப்ரொடக்சன் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தினார்கள் என்று சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தான் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் பல படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடும் ராஜா, வாழ், கொட்டுகாளி, தாய்க்கிழவி போன்ற பல வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக கோலிவுட் வட்டாரங்களில் நடிகர் நடிகைகளின் தேர்வு நடத்தி மோசடி செய்யும் பல கும்பல்கள் சுற்றித் தெரிகிறது. குறிப்பாக பிரபல நிறுவனத்தின் பெயரில்தான் இந்த மோசடி நடந்து கொண்டிருக்கின்றது.
சிவகார்த்திகேயன் நிறுவனம்:
ஆடிஷன் நடத்துகிறோம் என்ற பெயரில் இவர்கள் நடத்தும் மோசடியால் சினிமா ப்ரொடக்ஷன் நிறுவனங்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வாய்ப்பு கேட்டு வரும் பெண்களிடம் தவறாக நடந்து பாலியல் அத்துமீறல்களெல்லாம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு வந்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நிறுவனத்தின் பெயரிலும் போலியாக ஆடிஷன் நடத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
https://www.youtube.com/watch?v=eY-4BJh5Ro0
ஆடிசன் மோசடி:
இதை எடுத்து சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்சன் நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதில் அவர், தங்களுடைய நிறுவனம் பெயரில் யாரிடம் அத்துமீறலில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தை பயன்படுத்தி சிலர் மோசடி செய்து வருவதாக எங்கள் நிறுவனத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் அறிக்கை:
எங்கள் நிறுவனத்தின் திரைப்படங்களுக்கான நடிகர்கள் தேர்வு செய்யப்படுவது இயக்குனர்களோ, ஒருங்கிணைப்பாளர்களோ, காஸ்டிங் ஏஜெண்டுகளோ, வேறொரு நபர்களோ தீர்ப்பது கிடையாது. எஸ்கே ப்ரொடக்ஷன் வெளியிடும் எந்த ஒரு தகவல்கள் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் மட்டும் தான் வெளியிடப்படும். இது தொடர்பாக வாட்சப் செய்திகள், மின்னஞ்சல்கள் அழைப்புகள் அல்லது சமூக வலைத்தளங்களை நம்ப வேண்டாம். எங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.






