அதிமுக மாநாட்டில் திமுக துணை பொதுசெயலாளர் குறித்து அவதூறு. முன்னாள் அமைச்சர்கள் மீது புகார் மனு.  

0
660
- Advertisement -

மதுரையில் ஞாயிறு அன்று நடைபெற்ற அதிமுகவின் எழுச்சி மாநாட்டில் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி குறித்து அவதூறு பரப்பப்பட்டதாக திமுகவினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர். அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் வருகை தந்தனர். மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்களுக்கு மூன்று வேலையும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

-விளம்பரம்-

லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு வருகை தந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன் மூலம் லட்சக்கணக்கான தொண்டர்களும் வருகை தந்தனர். வந்த அனைவருக்கும் மூன்று இடங்களில் தொண்டர்களுக்காக உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டில் லட்ச கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 10 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டதாக மாநாட்டு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா கூறியிருந்தனர்.

- Advertisement -

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த மாநாட்டில் காலை முதலே அங்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. அங்கு வந்த தொண்டர்களுக்கு மூன்று வேலை மட்டுமல்லாமல் இரவு வரை உணவுகள் வழங்கபட்டது. நேற்று மாநாடு முடிவடைந்த நிலையில் அங்கு தொண்டர்களுக்கு தயார் செய்த. புளியோதரை உணவுகள் அங்கு அண்டா அண்டாவாக கொட்டப்பட்டு வீண் அடிக்கப்பட்டது. கொட்டப்பட்டு இருந்த உணவுகளின் மீது வாகனகள் ஏறி சென்றுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மாநாட்டில் வீண் அடிக்கப்பட்ட உணவுகளை பொறுப்பாளர்களும் உடனடியாக ஆதரவற்ற இல்லங்கள், எத்தனையோ சாப்பாடு இல்லாமல் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்திருக்கலாம். என்ற ஆதங்கம் பொது மக்களிடம் சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிட தக்கது.

-விளம்பரம்-

கனிமொழி குறித்து அவதூறு:

ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் மாநட்டில் தற்போது எம்.பியும் திமுகவின் துணை பொதுசெயலாளருமான கனிமொழி குறித்து அவதூறாக மேடையில் பாடல் பாடியதாகவும் அதை அங்கு இருந்த முன்னாள் அமைச்சர்கள் ரசித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதிமுகவின் மாநாட்டில் மேடையில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மீது அவதூறு பேசிய நபர் மீதும் இதற்கு தூண்டுதலாகவும் விருந்தினையாக இருந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெண்களை இழிவாகப் பேசியதாக சொல்லி கண்ணீர் வடித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்க வந்துள்ளோம்.

அந்தப் புகார் மூலம் பேசி எந்த நபர் மட்டுமே அல்லாமல் அதற்கு உறுதுணையாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும். மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மணிப்பூரிலே அவர்களின் கூட்டணி கட்சியானது பெண்களுக்கு எதிரான வன்முறை தொடுக்கும் போது அதே கூட்டணியில் இருக்க கூடிய அஇஅதிமுகவும் இன்று வந்து பெண்கள் என்று பாராமல் கூட ஒரு பொது வழியில் நாகரிகமற்ற முறையில் பேசறது வந்து அவங்க வந்து வரவேற்கின்றார்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கணும். என்றும் புகார் அளிக்க வந்த நபர் தெரிவித்து இருந்தார்.   

Advertisement