பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டில் புகுந்த பாம்பு – பதறிப்போய் ஓடிய வீட்டில் இருந்த பெரியவர்கள்.

0
590
fathima
- Advertisement -

பிரபல பிக் பாஸ் நடிகை பாத்திமா பாபுவீட்டில் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா துறையில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் நடிகை என்பதை விட பிரபலமான செய்தி வாசிப்பாளராக தான் மக்களுக்கு தெரியும். இவர் 1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். இவர் தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் தமிழில் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

-விளம்பரம்-

பின் தமிழில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துள்ளார். மேலும், இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார்.

- Advertisement -

செய்தி வாசிப்பாளர், நடிகை, பிக் பாஸ் போட்டியாளர் :

பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார்மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால், இவர் ஒரு சில வாரங்களிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து தன்னுடைய நடன திறமை வெளிப்படுத்தி இருந்தார்.

வீட்டில் புகுந்த பாம்பு :

இந்த நிலையில் பாத்திமா பாபு வீட்டில் பாம்பு புகுந்ததால் முதியவர்கள் எல்லாம் சிதறி அடித்து ஓடி உள்ள தகவல் தற்போது சோசியல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாத்திமா அவர்கள் சென்னை ஐயப்பன் தாங்கல் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். அங்கு இவருக்கு சொந்தமான வீடு ஒன்று இருக்கிறது. அந்த வீட்டில் 20க்கும் மேற்பட்ட முதியவர்களை தங்கவைத்து முதியோர் இல்லம் போல் நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

பதறி அடித்து ஓடிய முதியவர்கள் :

இப்படி ஒரு நிலையில் வீட்டில் நேற்று திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்த முதியவர்கள் பதறி அடித்து ஓடினார்கள். இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் பாத்திமா பாபு வீட்டுக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் புகுந்த பாம்பை பிடித்தனர்.

ஆறு அடி நீள பாம்பு :

மேலும், அந்த பாம்பு சாரை பாம்பு என்றும் அது ஆறடி நீளம் என்றும் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் பிடிக்கப்பட்ட பாம்பை கிண்டியில் இருக்கும் பூங்கா ஒன்றில் விட்டனர். இதேபோல் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின் அவர் குணமாகி வீடு திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் சல்மான் கானை கடித்த பாம்பு விஷ தன்மை அற்றது என்பதும் தெரியவந்தது.

Advertisement