திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் சினேகா-பிரசன்னா செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாகி இருகிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். பாக்யராஜ்-பூர்ணிமா, ரஜினி – லதா, அஜித் -ஷாலினி, சூர்யா – ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா- பிரசன்னா ஜோடி.
தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் பல வருடமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சினேகா. இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், விக்ரம், கமல், சூர்யா, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
சினேகா திரைப்பயணம் :
சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைக்கிறார்கள். இடையில் இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியில் நடுவராகவும், படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை சினேகா அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த கோட் படத்தில் நடித்திருந்தார்.

சினேகா குறித்த தகவல்:
இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சினேகா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி இருந்த டிராகன் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
தற்போது சினேகா சினிமா, நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருக்கிறார். அதோடு நடிகை சினேகா அவர்கள் நடிப்பில் மட்டும் இல்லாமல் சினேகாலயா என்ற துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
காதல் To கல்யாணம் :
இதற்கிடையில் இவர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது விகான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமான நடிகர் பிரசன்னா தற்போது மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் சினேகாவும், பிரசன்னாவும் பங்குனி பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று இருந்தார்கள். அப்போது அவர்கள் கோயிலில் பூஜை செய்து மனமுருகி வேண்டி கிரிவலம் பாதையில் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=R6DfYITZ2NI&t=1s
பக்தர்கள் கோபம்:
தற்போது அதுதான் சர்ச்சையாகி இருக்கிறது. காரணம், சினேகா-பிரசன்னா இருவருமே கிரிவலப் பாதையில் செருப்பு அணிந்து கொண்டே சென்றிருக்கிறார்கள். இதுதான் பக்தர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கிரிவலம் செல்ல பக்தர்கள், அண்ணாமலையார் மீது உள்ள பக்தியின் காரணமாக செருப்பு அணியாமல் தான் நடப்பார்கள். ஆனால், சினேகாவும் பிரசன்னாவும் செருப்போடு கிரிவல பாதையில் நடந்திருப்பது பெரும் பாவம் என்று கூறுகிறார்கள். ஆனால் சிலர், சினேகா பிரசன்னாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.






