நிறைமாத கர்பிணியாக தனது கணவர் மற்றும் மகனுடன் பொங்கலை கொண்டாடிய சினேகா. வைரலாகும் புகைப்படங்கள்.

0
113591
sneha

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றார். அதே போல சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான சினேகா மற்றும் பிரசன்னா பொங்கல் கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சினேகா.

இவர் 2001 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நீலப்பக்சி’ என்ற மலையாள மொழித் திரைப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர். மேலும்,அதே ஆண்டிலேயே ‘என்னவளே’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும்,இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் கொண்டார். 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார்கள்.

- Advertisement -

பின்னர் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக காதலித்து வந்தார்கள். அதனைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது இரண்டாவது முறை சினேகா அவர்கள் கர்ப்பமாக உள்ளார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஸ்னேகா தனது கணவர் மற்றும் மகனுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார்.

View this post on Instagram

Actress #Sneha #Prasanna Pongal Celebration

A post shared by Behind Talkies (@behindtalkies) on

சமீபத்தில் சினேகா கர்ப்பமாக உள்ளார் என்று அறிந்தவுடன் குடும்பமே அவருக்கு வளைகாப்பு நடத்தி சந்தோஷமான தருணத்தை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார் பிரசன்னா. இதனால் சினேகாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.மேலும்,இரண்டாவது குழந்தையின் வரவை எதிர் நோக்கி கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள்.

-விளம்பரம்-
Advertisement