பிரசன்னாவுடன் விவாகரத்தா ? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகா போட்ட பதிவு.

0
512
- Advertisement -

சினேகா – பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக இருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா பிரசன்னா ஜோடி. தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா. இவர் விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு.

-விளம்பரம்-
sneha

அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சினேகா இடையில் கொஞ்சம் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். மேலும், 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

- Advertisement -

பிரசன்னா – சினேகா குடும்பம்:

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான மகன் மற்றும் ஆத்யந்தா என்ற அழகான அழகான மகளும் இருக்கிறார்கள். தற்போது சினேகா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அதே போல தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக அறிமுகமானவர் நடிகர் பிரசன்னா.

பிரசன்னா – சினேகா திருமணநாள்:

தற்போது இவர் வில்லன், அற்புதமான நடிகர் என்ற பெயரையும் எடுத்து இருக்கிறார். இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இருவரும் ஒற்றுமையாக சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இவர்கள் தங்களின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடி இருந்தார்கள். அதற்கான புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.
அதோடு இருவருமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிரசன்னா – சினேகா பிரிவு:

அதில் தங்களுடைய குழந்தைகள் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவர்களை பாலோ செய்கிறார்கள். இந்நிலையில் சினேகா – பிரசன்னா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, சில நாட்களாகவே இணையத்தில் பிரசன்னா – சினேகா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், கூடிய விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் வைரலாகி இருந்தது.

சினேகா பதிவு:

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சினேகா தன்னுடைய சோசியல் மீடியாவில் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘ஹாப்பி வீக்கென்ட்’ என்று பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் மூலம் இவர்களுடைய விவாகரத்து குறித்த செய்தி அனைத்தும் பொய் என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், ரசிகர்கள் பலரும் இவர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் தயவு செய்து இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

Advertisement