தன் மகள் குறித்து கருத்து பதிவிட்ட நடிகை சினேகா. குவியும் வாழ்த்துக்கள்.

0
82129
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. இவர் 2001 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நீலப்பக்சி’ என்ற மலையாள மொழித் ஒரு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர். பின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். மேலும், 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில் சினேகா அவர்கள் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அதற்கான வளைகாப்பு புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது சிநேகாவிற்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சினேகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது குழந்தையை குறிப்பிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, கடந்த வாரம் எனக்கு ஒரு அழகான தேவை பிறந்து உள்ளாள். என் வாழ்க்கை இப்போது தான் ரொம்ப அழகாக உள்ளது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார். இதற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/B7_RImXnbFF/?utm_source=ig_web_copy_link

சமீபத்தில் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளி வந்த படம் “பட்டாஸ்”. இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து பட்டைய கிளப்பியது. இயக்குநர் துரை செந்தில் குமார் அவர்கள் இரண்டாவது முறையாக தனுசை இந்த பட்டாஸ் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்து உள்ளார். இந்த படத்தில் சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். விவேக்- மெர்வின் இசை அமைத்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும்.

-விளம்பரம்-
Advertisement