அன்னிக்கு அந்த குழந்தைங்க எல்லாம் வெய்யில்ல நின்னத பாத்த போது – சூர்யா கீழடி சர்ச்சை பற்றி சினேகன்

0
718
Surya
- Advertisement -

சூர்யாவின் கீழடி அருங்காட்சியகம் சர்ச்சை குறித்து பாடலாசிரியர் சினேகன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 18 கோடி 41 லட்சம் செலவில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டிருக்கிறது. இதில் பத்து கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கிறது. அதில் ஆறு கட்டடங்களில் இரண்டு தளங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

-விளம்பரம்-

வீடியோ காட்சிகள், அனிமேஷன் காட்சிகள் எல்லாம் மெகா சைஸ் டிவிகளில் ஒளிபரப்பப்படுகின்றது. மேலும், ஒவ்வொரு தளத்திலும் மினியேச்சர் சிற்பங்கள், புடைப்பு சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட குறிப்பிட்ட தேதி வரை இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கட்டணங்கள் என்றும் கூறியிருந்தார்கள். அதோடு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த அருங்காட்சியத்தை பார்க்க அனுமதி என்றும் அறிவித்திருந்தார்கள்.

- Advertisement -

கீழடியில் சூர்யா குடும்பம்:

கீழடி அருங்காட்சியகத்தை திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், வெளிநாட்டு தூதர்கள் என பலரும் பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் கீழடி அருங்காட்சியத்தை காண வந்திருந்தார். சூர்யா குடும்பத்தினர் வந்திருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி அருங்காட்சியகம் நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது. மேலும், அருங்காட்சியத்தை பார்வையிட வந்த மாணவர்கள் வெயிலில் கால் கடக்க சில மணி நேரம் காத்து நின்று இருந்தார்கள்.

சூர்யாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

இது குறித்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகியிருக்கிறது. இதை பார்த்த பலரும் சூர்யாவை விமர்சித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்நிலையில் சூர்யாவின் கீழடி சர்ச்சை குறித்து சினேகன் அளித்து இருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது, பாடலாசிரியர் சினேகன் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்டு இருக்கிறார். பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், கீழடி அருங்காட்சியத்தை பார்ப்பதற்காகவே நான் வந்தேன். நம் நாட்டின் பெருமைகளையும், தரவுகளையும் மிக அழகாக பராமரித்து இருக்கின்றனர். இந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு எனக்கு மனமே இல்லை.

-விளம்பரம்-

சினேகன் அளித்த பேட்டி:

மேலும், வரலாற்று புகைப்படங்கள் அதன் வழிமுறைகளை கேட்கும்பொழுது இன்னும் தமிழுடைய திமிர் தலைக்கேறி நிற்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. இந்த மண்ணுக்கு துரோகமான செயலை இந்த மண்ணுக்குரியவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இந்த மண்ணுக்கு எந்த கெடுதல் நடந்தாலும் அதற்கு எதிராகத்தான் நாங்கள் இருப்போம். அதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் நீதி மையத்திற்கு இருக்கிறது. மக்கள் நீதி மையத்தின் உறுப்பினராகவும், ஒரு கவிஞராகவும் எனக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது. அதேபோல் சூர்யா கீழடி சர்ச்சை குறித்து பலரும் என்னிடம் கேட்டார்கள்.

சூர்யா குறித்து சொன்னது:

அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. வெறும் தகவலின் அடிப்படையில் வைத்து நான் பேசுவது சரியாக இருக்காது. அவர் வேண்டும் என்று செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏதோ இந்த சம்பவம் தெரியாமல் நடந்திருக்கலாம். ஒரு தனிப்பட்ட முறையில் நான் நம்புகிறேன். அவர் அப்படி செய்கிற ஆளும் இல்லை. அவர் கண்டிப்பாக அப்படி செய்திருக்க மாட்டார். இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அன்றைக்கு எனக்கும் இந்த காணொளியை பார்க்கும் பொழுது சின்ன குழந்தைகள் வெளியே நிற்கிறார்களே! என்று வருத்தப்பட்டேன். ஆனால், காட்சியில் பார்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்பதற்கும் வேறு மாதிரியாக இருக்கிறது. நான் தெரியாமல் தீர்ப்பு சொல்லி விடக்கூடாது. இந்த அருங்காட்சியகம் எல்லோருக்கும் பொதுவானது. எனவே அனைவரும் நம் பெருமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement