பிக் பாஸ் கண்டுபிடிக்க முடியாத சினேகனின் வீடு எங்கே இருக்கு… தெரியுமா?

0
3430
snehan

`பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் சினேகன் ஒரு முக்கியப் போட்டியாளர். ஆனால், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பார்ப்பவர்களுக்குத் தெரியுமா? ஒரு சிலருக்குத் தெரிந்தாலும், பலருக்குத் தெரியாது… `பிக் பாஸ்’ குழுவினரால் கண்டுப்பிடிக்க முடியாததை, நாம் இப்போது கண்டுபிடித்திருக்கிறோம்.

snehan

- Advertisement -

“நான் ஊருக்குப் போய் 15 வருஷங்களுக்குமேல் ஆச்சு. எனக்கு யாருமே இல்லை” என்று `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார் சினேகன். உண்மையிலேயே அவருக்கு யாருமே இல்லையா? அவர் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவர். அவருடைய குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க, அவருடைய சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், புதுகரியப்பட்டி கிராமம்.

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 23-வது கிலோமீட்டரில் செங்கிப்பட்டிதான் சுற்றுவட்டார கிராமத்துக்கு லேண்ட்மார்க்.

-விளம்பரம்-

snehan-tamilthai-vaalthu

சினேகனின் ஊரில் உள்ளவர்கள் அவரை செல்வம் என்று தான் கூப்பிடுகிறார்கள். சினேகனின் அண்ணன்கள் நான்கு பேர், அவர்களது நான்கு வீடுகள் ஒரே இடத்தில், சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் முள்வேலியோடு பிரமிக்கவைக்கிறது.

சினேகனுக்கு ஒரு அக்கா இருக்காங்க. அவர்களை இதே ஊர்லதான் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காங்க. ஊருக்குள்ள ஒரு ஓட்டு வீட்டுலதான் ஆரம்பத்துல இருந்தாங்க. அண்ணன்களுக்குக் கல்யாணம் ஆகியும் கூட்டுக்குடும்பமா இருந்ததால, புது வீடு கட்டினாலும் எல்லோரும் ஒண்ணா இருக்கணும்னுதான் சினேகனின் ஆசை.

snehan-sakthi

சினேகனை பற்றி ஊரில் உள்ள ஒருவர் கூறியது :

ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் தோட்டம் அமைத்து, இயற்கையோடு வாழ்வதுதான் ஸ்நேகனின் அபிப்பிராயம். ஊருக்கு வந்தால் சொந்த வீட்டில்தான் தங்க வேண்டும். அதுக்காகத்தான் இப்படி ப்ளான் செஞ்சு கட்டினார் சினேகன். பூர்வீக இடம் என்பதால், பார்த்துப் பார்த்துக் கட்டினாங்க. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓடித் திரிந்து விளாடிய ஊர்தான் இது. எங்க ஊர் தஞ்சாவூர் ஜில்லாவில் எங்கே போய்ச் சொன்னாலும், `சினேகன் ஊரா?’ன்னுதான் கேட்பாங்க. அவருடைய பாடல்களை நினைவுபடுத்துவாங்க. என்னான்னு தெரியலை. ஒரு அண்ணன் மட்டும் அந்த வீட்டுல இருக்கிறார்” என்று ஷாக் கொடுத்தார்.

Snehan

“செல்வம் அண்ணன், தஞ்சாவூர் வந்துச்சுன்னா எங்க ஊர்ல வந்து தங்கமாட்டார். தஞ்சாவூரிலேயே தங்கிடுவார். அண்ணன்கள் மேலே உள்ள பாசத்தால்தான் வீடு கட்டி கொடுத்திருக்கிறார். திருக்காட்டுப்பள்ளியில்தான் படிச்சிச்சு. இப்போ சென்னையிலே இருக்குது. நிறைய பாடல் எல்லாம் எழுதியிருக்கு. அம்மான்னா செல்வத்துக்கு அளவுகடந்த ப்ரியம். ஏன்னா, செல்வம்தான் கடக்குட்டி.” என்றனர்.

raiza anger

சினேகனின் அப்பா அந்த வீட்டில் தான் வசித்து வருகிறார். அங்கிருந்து சினேகனின் பழைய ஓட்டு வீடு சிறிது தூரத்தில் இருக்கிறது. சிறிய ஓட்டு வீடு, கதவுகள் மூடப்பட்ட நிலையில் அப்படியே பாழடைந்து கிடக்கிறது. எங்கும் ஆட்டுப்புழுக்கைகள். சினேகன், ஜெயலலிதாவிடம் வாங்கிய விருது மட்டும் சுவரில் மாட்டப்பட்டு, கழற்றப்படாமல் பளிச்சிடுகிறது. “இதுதான் சினேகன் வளர்ந்த வீடு. அவங்க அம்மா இங்கேதான் மறைந்தார்” என்றார்கள்.

Advertisement