-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இரண்டாவது குழந்தைக்கு தயாரான சினேகா.! சிம்பிளாக நடந்த சீமந்தத்தின் புகைப்படங்கள்.!

0
34048
sneha

தென்னிந்திய சினிமா திரை உலகில் பிரபலமான ஜோடிகளில் பிரசன்னா மற்றும் சினேகா ஆகும். மேலும, அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது என்றும் தற்போது வளைகாப்பு நடந்து முடிந்தது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.அதுமட்டும் இல்லாமல் சினேகா குடும்பத்தினர் வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையங்களில் பதிவிட்டுள்ளார். சினிமா திரையுலகில் உள்ள நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த வரிசையில் பாக்கியராஜ்- பூர்ணிமா, அஜித்- ஷாலினி, சூர்யா- ஜோதிகா ஆகியோர்களை போல பிரசன்னா-சினேகாவும் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-
Image

ராஜாராம்- பத்மாவதி தம்பதியினருக்கு பிறந்தவர் தான் சினேகா . இவருடைய இயற்பெயர் சுகாசினி ஆகும். இவர்கள் மும்பையில் தான் முதலில் இருந்தார்கள். பின் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊருக்கு குடியேறினார்கள். மேலும், அவருக்கு அங்கே ஒரு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. சினேகா அவர்கள் முதன் முதலில் மலையாளத்தில் ‘இங்கனே ஒரு நீல பக்சி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.அதற்கு பின்னர் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு ‘என்னவளே’ என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானர்.

இந்த படத்தின் மூலம் அவர் மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து மம்முட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். தொடர்ந்து புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, ஆட்டோகிராஃப், புன்னகைதேசம், சிலம்பாட்டம், பவானி ஐபிஎஸ், பிரிவோம் சந்திப்போம் என பல படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் நடித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் விளம்பர மாடலிங் கூட செய்துவந்தார்.சினேகாவின் சிரிப்பு ஒன்றே போதும் ரசிகர்கள் விழுவதற்கு. அதனாலேயே அவரை ‘புன்னகை அரசி’ என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு அவருடைய சிரிப்பும், முகபாவமும் இருக்கும்.

Image
Image
-விளம்பரம்-

மேலும் சினேகா அவர்கள் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலும், அழகான தோற்றத்திற்கும், நடிப்புத் திறனுக்காகவும் தான் ரசிகர்கள் இவரை இன்னும் விரும்புகிறார்கள். தற்போது அவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகிறார். இவர் 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார்கள். பின்னர் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் 2011ம் ஆண்டு பிரசன்னா அவர்கள் தங்களுடைய காதலை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

-விளம்பரம்-

அதனைத்தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது சினேகா அவர்கள் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் இணையங்களில் பரவியது. மேலும், இரண்டாவது குழந்தைக்கு பிறகு சினேகா நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது . அதுமட்டுமில்லாமல் சினேகா கர்ப்பமாக உள்ளார் என்று அறிந்தவுடன் குடும்பமே அவருக்கு வளைகாப்பு நடத்தி சந்தோஷமான தருணத்தை புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளது. ஆனால் சினேகாவை பார்த்தால் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று சொன்னால் நம்ப முடியாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.மேலும், சமூக வலைதளங்களில் சினேகா-பிரசன்னாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள் .

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news