தமிழகத்தில் உள்ள சினிமா கலைஞர்களை காப்பாற்ற பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது என்று இயக்குனர் பா ரஞ்சித் விமர்சித்துப் பேசி இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையில் எல்லோரையும் கட்டிபோட்டவர். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அதில் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா தான் எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார். என்று இளையராஜா, மோடி குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். அண்ணல் அம்பேத்காருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மோடி குறித்து இளையராஜா கூறியது:
மேலும், இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்து இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்தன. பலரும் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய பேச்சுக்கு இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். தற்போது இது தான் சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித் கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் பா ரஞ்சித் பங்கேற்றிருந்தார். அதில் அவர்,

இயக்குனர் பா ரஞ்சித் அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ள சினிமா கலைஞர்களை காப்பாற்ற பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் இளையராஜா பேசியது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? எவ்வளவு நடிகர்கள் நடிகைகள் பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அது இவ்வளவு கவனத்தைப் பெறவில்லை? கலை என்பது எங்கெல்லாம் உள்ளது, யாரிடம் சென்று சேர்ந்துள்ளது, அந்த கதையின் மதிப்பு என்ன? அதனை படைத்த கவிஞனின் மதிப்பு என்ன? இதெல்லாம் சமூகத்தில் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றன.

இளையராஜா குறித்து கூறியது:
ஆகவே, கலை மற்றும் கலைஞனின் மதிப்பை பொறுத்து தான் இங்கு அனைத்தும் பார்க்கப்படுகிறது. ஏன்னா, கலையும், கலைஞர்களையும் எப்போதும் பிரித்து பார்க்க முடியாது. மேலும், இளையராஜா என்பவர் இசையில் புரட்சியை நிகழ்த்தியவர். ஒரு காலத்தில் குறிப்பிட்ட தரப்பினர் மட்டும் சொந்தம் கொண்டாடிய இசையை ஜனநாயகபடுத்தி அனைவருக்குமான தாக்கியவர். எனவே இது போன்ற பெரும் கலைஞனை கைப்பற்றுவதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சூழ்ச்சியை அரங்கேற்றுவதற்க்கான வேலை நடந்துகொண்டிருக்கிறது. மேலும், இதுவரை இளையராஜா அரசியல் ரீதியான கருத்தை முன்வைத்தோ அல்லது வேறு சமூக கருத்தை தெரிவித்ததோ இல்லை.

மோடி-இளையராஜா விவகாரம்:
இவர் கடைசி வரை அனைத்து இடங்களிலும் அனைத்து மேடைகளிலும் இசையின் பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசி வந்துள்ளார். அவரது இசை எங்கிருந்து வருகிறது என்பது மிகவும் முக்கியமானது. அவரது இசை எங்கு தொடங்கியது, தமிழ் சினிமாவுக்கு இளையராஜாவின் இசை எவ்வளவு முக்கியமானது? என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆகவே அவர் மூலம் ஒன்றை உருவாக்கவே தான் அம்பேத்கர் மோடி விவகாரம் கவனம் பெற்றதாக நான் நினைக்கிறேன். இளையராஜா மூலம் பேசினால் மோடி பிரபலமாகும் என்பதனால் தான் இப்படி நடக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் புத்தகத்தின் முன்னுரையில் அம்பேத்கருடன் முன்னுரை எழுதினாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
பாஜக குறித்து ரஞ்சித் கூறியது:
இந்த சூழலில் திடீரென இளையராஜாவை பாஜகவும், இந்துத்துவ சக்திகளும் கைப்பற்ற துடிப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என தெரிவிக்கின்றார். இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டில் ஜாதி, மதத்திற்கு எதிராக ஒரு மாடல் உருவாகி வருகிறது. அதனை இளையராஜாவை வைத்து உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இதனை மிக கவனமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதே நேரம் கலைஞர்கள் சமூக பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.





