அன்று சொல்வதெல்லாம் உண்மையில் கள்ளக் காதலி, இன்று பராசக்தி – லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
1946
lakshmi
- Advertisement -

ஆதி பராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக்கொள்ளும் அன்னபூரணியை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என இயக்குனரும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக தமிழ்நாட்டில் போலி சாமியார்களுக்கு பஞ்சம் இல்லை. அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக பெண் சாமியார் ஒருவர் புது அவதாரம் எடுத்துள்ள வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது. அன்னபூரணி அரசு அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டு உள்ளார் அன்னபூரணி.

-விளம்பரம்-

யார் இந்த திடீர் சாமியார் :

அந்த வீடியோவில் பொதுமக்கள் பக்தி பரவசத்தால் கத்திக்கொண்டும் பூஜை செய்யும் வீடியோக்கள் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அந்த வீடியோக்களும் இதனுடன் இணைத்து வெளியிட்டு உள்ளார்கள். அதில் அன்னபூரணி திருமணமாகி குழந்தைகள் இருந்த ஒருவருடன் விவாகரத்து பெறாமல் சட்டவிரோதமாக குடும்பம் நடத்தி வந்ததாக அன்னபூரணி மீது புகார் எழுந்தது.

- Advertisement -

லட்சுமி ராமகிருஷ்ணன் ஷாக் :

ஆனால், தற்போது அன்னபூரணி திடீர் சாமியாராகி உள்ளார். இந்நிலையில் இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அன்னபூரணி குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன். எனக்கும் அந்த வீடியோவை அனுப்பி இருந்தார்கள். அந்த வீடியோவை எல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஆனால், மக்கள் இப்படி போலி சாமியார்களை கண்டு ஏமாந்து போகிறார்கள் என்பதை நினைத்து எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

போலி சாமியார் :

மேலும், நான் அன்னபூரணியின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, அவர் நடத்தை குறித்தோ எதையும் விவாதிக்க விரும்பவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால், இதுபோன்ற போலி சாமி என்று சொல்லிக்கொண்டு காலில் விழுவது தவறான விஷயம், முட்டாள்தனம். இந்த மாதிரி போலி சாமியார்களை சாமி என்று சொல்லி மக்கள் நம்புவது பரிதாபமாக இருக்கிறது. எத்தனை நாட்கள் ஏமாறுவதற்கு நாம் ரெடியாக இருக்கிறோமோ? அது வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

-விளம்பரம்-

சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்த போது :

இதில் ஜாதி, மதம் என்றெல்லாம் வேண்டாம். நான் கடவுளின் அவதாரம் என சொல்லிக் கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக்கூடாது. சிந்தித்து கண் விழித்துக் கொள்ள வேண்டும். சில வருடங்களுக்கு முன் இந்தப் பெண் என்னுடைய நிகழ்ச்சிக்கு வந்தபோது சட்டவிரோதமாக இன்னொருவரின் கணவருடன் குடும்பம் நடத்துவது தவறு என அறிவுரை வழங்கி நான் அனுப்பி வைத்தேன். ஆனாலும், அவர் இவனோடு தான் வாழ்வேன் என்று கூறியிருந்தார்.

சிரிப்பு தான் வருது :

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவர் அப்படி தான் வாழ்வேன் என்று சொல்லி விட்டுப் போனார். அதற்கு பிறகு எந்த தொடர்பும் கிடையாது. தற்போது இவருடைய வீடியோவை பார்க்கும்போது எனக்கு சிரிப்பு தான் வருது. இப்படி தன்னை அன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று சொல்லிக் கொள்வதை கேட்டு மக்கள் அவர் காலில் விழுவதே தவறானது. தயவு செய்து இந்த செயலை செய்யாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement