நடிகை சோனாவை மிரட்டி வீட்டில் அதிரடியாக நுழைந்த திருடர்கள் கைது – போலீஸ் தீவிர விசாரணை

0
530
- Advertisement -

நடிகை சோனா வீட்டில் அத்துமீறி நுழைந்த திருடர்களை போலீஸ் கைது செய்து இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகை ஆக இருப்பவர் சோனா. இவர் மதுரவாயில் கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி சோனா வீட்டில் திருடர்கள் சுவர் ஏறி உள்ளே சென்று இருந்தார்கள். வீட்டின் பின்பக்கம் வெளி பக்கமாக பொருத்தப்பட்டிருக்கும் ஏசி யூனிட்டை அவர்கள் திருட பார்த்தார்கள்.

-விளம்பரம்-

திருடர்களின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த நாய் குறைத்தது. உடனே சோனா நாய் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது திருடர்களை பார்த்து அவர் சத்தம் போட முயற்சித்தார். ஆனால், அவர்கள், சத்தம் போட்டால் குத்தி விடுவேன் என்று சோனாவை கத்தி மிரட்டி இருந்தார்கள். இதனால் நடிகை சோனா பயந்து விட்டார். உடனே அங்கிருந்து திருடர்கள் தப்பித்து சென்றிருக்கிறார்கள்.

- Advertisement -

சோனா வீட்டில் திருட்டு:

அதற்குப்பின் சோனா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயில் போலீசார் சோனாவின் வீட்டின் அருகில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை சோதனை செய்தார்கள். சிசிடிவி கேமராவில் இருந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து திருட வந்தது சிவா மற்றும் லோகேஷ் என்பவர் தெரியவந்தது. அவர்கள் இருவரையுமே மதுரவாயில் குற்ற பிரிவு போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

சோனா பேட்டி:

தற்போது இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சோனா, நான் வீட்டில் நின்று கொண்டிருந்தேன். பின்பக்கமாக திருடர்கள் வந்ததை பார்த்த என்னுடைய நாய்க்குட்டி குறைத்தது. நானும் சத்தம் கேட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் என்னை கத்தி காட்டி மிரட்டி தப்பித்துச் சென்று விட்டார்கள். பட்டப்பகலிலேயே அவர்கள் இப்படி செய்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சோனா திரைப்பயணம்:

மேலும், சோனா அவர்கள் 2022-ல் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றிருந்தார். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தார். அதனை பின் இவர் குணசித்திர வேடங்களிலும், காமெடி வேடங்களிலும் நடித்து வந்தார். பெரும்பாலும் இவர் கவர்ச்சியாக தான் மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இவர் குசேலன், ஜித்தன் 2, குரு என் ஆளு, அழகர் மலை போன்ற பட படங்களில் நடித்திருந்தார்.

சோனா குறித்த தகவல்:

அதற்குப்பின் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற உடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்தார். முதலில் இவர் கன்னட மொழிகளில் நடித்திருந்தார். அதற்கு பின் தமிழிலும் சில சீரியல்களில் நடித்தார். அதன் பின் மீ டு விவகாரம் தொடர்பாக சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கிய நடித்து வருகிறார்.

Advertisement