ஒண்ணு அவ இருக்கணும், இல்ல நான் இருக்கணும்’- மாரி சீரியலில் இருந்து வெளியேறிய சோனா. நடந்தது என்ன?

0
2472
- Advertisement -

மாரி சீரியலில் இருந்து திடீரென நடிகை சோனா விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. அதன் பின் இவர் ஷாஜகான், வில்லன் போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பதும் குறிபிடத்தக்கது.

-விளம்பரம்-

அதன் பின் இவர் சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். இவர் இவர் முதன்முதலாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த அபி டெய்லர் என்ற சீரியல் தான் நடித்திருந்தார். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதனை அடுத்து இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மாரி சீரியல்:

இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த
தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இது தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சீரியலில் மாரி என்கிற பெண்ணுக்கு முன்கூட்டியே நடப்பது அம்மனின் அருளால் தெரிய வருகிறது. இதனால் அவர் வரும் ஆபத்தில் இருந்து பிறரை காப்பாற்றுகிறார்.

மாரி சீரியலில் சோனா:

இதனால் அவரது வாழ்க்கையில் நடக்கும் சோதனைகள் தான் சீரியலின் கதையாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த சீரியலில் தாரா என்கிற மாமியார் வில்லி கதாபாத்திரத்தில் சோனா நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிகை சோனாவிற்கு மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தெய்வமகள் சீரியல் நடிகை ஷப்னம். தற்போது சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் திடீரென நடிகை சோனா சீரியலில் இருந்து வெளியேறி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இது குறித்து சின்னத்திரை வட்டாரத்தில் விசாரித்த போது, சீரியல் ஆரம்பித்த நாட்களில் சோனா- ஷப்னம் ஆகிய இருவருக்கும் மத்தியில் நல்ல நட்பு இருந்தது. இருவரும் பிரேக் டைமில் ஜாலியாக கேலி, கிண்டல் செய்து பேசிக் கொண்டிருப்பார்கள். சீரியலின் கதைப்படி தாராவின் மற்ற மருமகள் எல்லாம் அவருக்கு அடங்கி போக ஷப்னம் மட்டும் தான் மாமியாருக்கு அடங்காத மருமகளாக, கேள்வி கேட்பவராக இருப்பார். அதோடு ஷஃப்னம் இயல்பாகவே கலகலப்பாக பேசக்கூடிய நபர். ஷூட்டிங்கில் வசனத்தை அப்படியே பேசாமல் டைமிங்காக பஞ்ச் பேசுவது, ஹியூமர் பண்ணுவது என்று இருப்பார்.

சோனா அளித்த விளக்கம் :

இப்படி ஒரு சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சம்பவங்களால் இரண்டு பேருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு காட்சியில் சோனா கீழே விழுவது போல் இருக்கும். அதை தாங்கி பிடிக்கும் போது என்னத்த இந்த கணம் கணக்கறிங்க என்று கேட்டு கூடவே சில வார்த்தைகளையும் ஷப்னம் பயன்படுத்துகிறார். இது சோனாவை அதிகம் கோபப்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து இருவருக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை இல்லை. பின் இருவரும் பின்னாடி பேசுவது, ஜடை மாடையாக பேசுவது என்று இருந்தால் சண்டை பெருசாகத்தான் செய்யும். அதுதான் நடந்தது. ஒரு கட்டத்தில் சோனா சீரியலை விட்டு விலகுகிறேன் என்று சொன்னதுக்கு சேனல் தரப்பிலும் சரி என்று சொல்லிவிட்டார்கள். இனிமேலாவது சீரியல் பிரச்சனை இல்லாமல் போகுமா? என்று பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.

Advertisement