ரஜினி பட நடிகையாக இருந்தாலும் கடமையில் தவறாத அதிகாரி – வைரலாகும் வீடியோ

0
479
- Advertisement -

ஏர்போர்ட்டில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை போலீஸ் தடுத்து நிறுத்தி இருந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்கள் ஏர்போர்ட்டுக்கு வந்தாலே போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அதுமட்டுமில்லாமல் அவர்களுடன் புகைப்படம், வீடியோக்களை எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து விடுவார்கள். அப்படித்தான் பல பிரபலங்கள் உடைய வீடியோக்கள் வைரலாகி இருக்கு.

-விளம்பரம்-

அதில் சில வீடியோக்கள் சர்ச்சையாகி இருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு பிரபலங்கள் ஏர்போர்ட்டில் இருக்கும் வீடியோ தான் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரஜினி படம் நடிகை சோனாக்ஷி சின்ஹா வீடியோ தான் வைரலாகி வருகிறது. இவர் இன்று ஏர்போர்ட்டுக்கு சென்றிருக்கிறார். பின் சோனாக்ஷி ஏர்போட்டில் தன்னுடைய அடையாள அட்டையை காண்பித்திருக்கிறார். அதை வாங்கி பார்த்த அங்கிருந்த அதிகாரி, சோனாக்சியை உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கிறார்.

- Advertisement -

ஏர்போர்ட்டில் சோனாக்ஷி வீடியோ:

பின் அவர் உங்களுடைய கண்ணாடியை கழட்டி முகத்தை காட்டுங்கள் என்று சொன்னதற்கு சோனாக்ஷியும் கண்ணாடியை கழட்டி முகத்தை காண்பித்து இருக்கிறார். அதற்குப் பிறகு தான் சோனாக்ஷியை உள்ளே அனுமதித்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சோனாக்ஷி சின்கா. நடிகர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி .

சோனாக்ஷி குறித்த தகவல்:

இவர் முதலில் ஆடை வடிவமைப்பாளராக தான் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தபாங் படத்தில் கிராமத்து பெண்ணாக சோனாக்ஷி நடித்து இருந்தார். இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். தமிழில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் சோனாக்ஷி சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

சோனாக்ஷி திரைப்பயணம்:

அதற்கு பின் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் இவர் பாலிவுட்டில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்தார். அதுமட்டும் இல்லாமல் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானின் “தபாங் 3” என்ற படத்தில் நடிகை சோனாக்ஷி கதாநாயகியாக நடித்து மிக பெரிய அளவில் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார். இதற்கிடையில் இவர் நடிகர் ஜாகீர் இக்பால் காதலித்து வந்தார்.

சோனாக்ஷி திருமணம்:

பின் கடந்த ஆண்டு இவர்களுக்கு எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின் கடந்த மாதம் தான் சோனாக்ஷி தன்னுடைய காதலனை கரம் பிடித்தார். எளிமையாக நடந்த இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள். சோனாக்ஷி திருமண புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பிரபலங்கள் ரசிகர்கள் என பலமே வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். திருமணத்திற்கு பிறகும் சோனாக்ஷி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

Advertisement