இதை கையில் வைத்திருப்பதால் எனக்கு கூச்சம் இல்லை ! தனுஷ் நடிகை வெளியிட்ட புகைப்படம்

0
2086

அக்சய் குமார் மற்றும் சோனம் கபூர் நடித்து இந்த வாரம் வெளியாகியுள்ள படம் Padman. கோயமுத்தூரை சேர்ந்த முருகன் என்பவர். பெண்களின் மாதவிடாய் சமயத்தில் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வை பல ஆண்டுகாலம் ஏற்படுத்தி வருகிறார்.

sonam kapoor

இவரது கதையை மையமாக வைத்து இந்த Padman படம் பாலிவுட்டில் தயாராகி உள்ளது. முருகன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிக்கிறார். படம் வெளிவந்துள்ள இந்நிலையில் இதுகுறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்களுக்கு மாதவிடாய் வருவது இயற்கையான ஒன்று, அதில் வெட்கப்படவோ அல்லது தள்ளிவைக்கவோ எதுவும் இல்லை என்பதை குறிக்கும் வகையில், சானிட்டரி நான்கின்களை கையில் வைத்தது போல போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சோனம்கபூர்.

இதன் விழிப்புணர்வின் பெயர் #PadManChallenge ஆகும். இந்த சேலன்ஜய் ராதிகா ஆப்தே, அக்சய் குமார் என பல நடிகர் நடிகைகள் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.