தனது முன்னாள் கணவர் பற்றி சோனியா அகர்வால் இப்படி சொல்வார்னு நினைக்கல.!

0
2079
Sonia-agarwal
- Advertisement -

நடிகை சோனியா அகர்வால் சண்டிகாரை சேர்த்தவர். மார்ச் 28 1982ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு தற்போது 35 வயதாகிறது. அங்கு உள்ள பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தை சார்ந்தவர். மாடலிங்கில் கொடிகட்ட பறந்த அவரை இயக்குனர் செல்வராகவன் அழைத்து வந்து தன்னுடைய காதல் கொண்டேன் படத்தில் அவருக்கு அறிமுகம் கொடுத்தார்

-விளம்பரம்-

தமிழில் வெளியான காதல் கொண்டேன் படம் இருக்கு ஒரு ப்ரேக் கொடுத்தது. அதன் பின்னர் முன்னணி நடிகையாக இவர், சிம்புவுடன் கோவில், விஜயுடன் மதுர, பின்னர் கோவில், ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட ஹிட்டான படங்களில் நடித்தார்.

- Advertisement -

பெரும்பாலும் தமிழ் படங்களில் மட்டுமே நடித்த சோனியா, தெலுங்கிலும் ஒருசில படங்களில் நடித்தார். பின்னர், 2006ல் இயக்குனர் செல்வராகவனுடன் ஏற்பட்ட காதலினால் அவருடன் திருமணம் செய்துகொண்டார். 

இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக்கொண்டனர். இவருக்குஇருந்த குடிப்பழக்கத்தால் தான் இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சோனியா அகர்வால் செல்வராகவன் பற்றி குறிப்பிடும் போது, செல்வராகவன் தான் எனக்கு நடிப்பு என்றால் என்ன என்பதை சொல்லிக் கொடுத்தார்.

-விளம்பரம்-

அவர் தான் என் குரு எனக்கு ஹிந்தி இங்கிலீஷ் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது இருப்பினும் தமிழில் என்னை ஒரு சிறந்த நடிகையாக மாற்றினார். ஷூட்டிங்கின் போது அவர் என்னை சிறப்பாக நடிக்கும் வரை நிறைய சிரமத்தை கொடுத்துகொண்டே இருப்பார். ஆனால், அவை எல்லாம் அந்த காட்சி சரியாக வரவேண்டும் என்பதற்காக தான். இன்றளவும் திவ்யா, அனிதா போன்ற கதாபாத்திரம் 15 ஆண்டுகளுக்கு பின்னரும் பேசப்பட்டு வருவதற்கு அவர் ஒரு காரணமாக இருக்கிறார்.

Advertisement