செல்வராகவனை பிரிந்தது இதனால் தான் – முதல் முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த சோனியா அகர்வால்.

0
800
selvaraghavan
- Advertisement -

செல்வராகவனுடன் விவாகரத்து ஆனது பற்றி முதன் முதலாக சோனியா அகர்வால் மனம் திறந்து கூறியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பின்னர் தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் தான் சோனியா அகர்வால் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. அதே போல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வால் நடித்திருந்தார். இதனால் செல்வராகவன்-சோனியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

- Advertisement -

செல்வராகவன்-சோனியா அகர்வால் திருமணம்:

பின் இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது. பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக் கொண்டனர். இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது. மேலும், திருமணம் செய்துகொண்ட சில வருடங்களிலேயே செல்வராகவன்- சோனியா அகர்வால் ஜோடி பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தது ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தன.

செல்வராகவன்-சோனியா அகர்வால் பிரிவு:

பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் நல்ல நண்பர்களாக உள்ளனர். விவாகரத்திற்குப் பிறகு சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் செல்வராகவனுடன் ஏற்பட்ட விபத்து குறித்து சோனியா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவனுடன் இணைந்து தொடர்ந்து படங்களில் நடித்தேன். அப்போது அவரின் ஹார்ட் வொர்க் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

-விளம்பரம்-

விவாகரத்து குறித்து சோனியா அளித்த பேட்டி:

பின் இருவரும் காதலிக்க ஆரம்பித்தப் பிறகு திருமணமும் செய்து கொண்டாம். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதே போல விவாகரத்து செய்யும் போதும் கொஞ்சம் மனவலி உடனேயே இருவரும் பிரிந்தோம் என்று கூறுகிறார். இவர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி ராமன் என்பவரை திருமணம் ஆண்டு கொண்டார். இவர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் நடிக்கும் படங்கள்:

தற்போது இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பீஸ்ட், சாணிக்காகிதம் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் இயக்குனர் செல்வராகவன் நடித்திருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. செல்வராகவன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சாணிகாகிதம் படம் கூடிய விரைவில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ’சாணிகாகிதம்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், செல்வராகவன் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பயங்கர டெரராக போஸ் கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisement