4 நாளா சோனியா அகர்வால் கொடுத்த பில்ட்டப்பில் இரண்டாம் திருமணம் என்று நினைத்த ரசிகர்கள். கடைசில இதான் விஷயம்.

0
2109
Sonia-agarwal
- Advertisement -

நடிகை சோனியா அகர்வால் சண்டிகாரை சேர்த்தவர். மார்ச் 28 1982ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு தற்போது 35 வயதாகிறது. அங்கு உள்ள பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தை சார்ந்தவர். மாடலிங்கில் கொடிகட்ட பறந்த அவரை இயக்குனர் செல்வராகவன் அழைத்து வந்து தன்னுடைய காதல் கொண்டேன் படத்தில் அவருக்கு அறிமுகம் கொடுத்தார்தமிழில் வெளியான காதல் கொண்டேன் படம் இருக்கு ஒரு ப்ரேக் கொடுத்தது.அதன் பின்னர் முன்னணி நடிகையாக இவர், சிம்புவுடன் கோவில், விஜயுடன் மதுர, பின்னர் கோவில், ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட ஹிட்டான படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

பெரும்பாலும் தமிழ் படங்களில் மட்டுமே நடித்த சோனியா, தெலுங்கிலும் ஒருசில படங்களில் நடித்தார். பின்னர், 2006ல் இயக்குனர் செல்வராகவனுடன் ஏற்பட்ட காதலினால் அவருடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக்கொண்டனர். 

- Advertisement -

இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்னர் செல்வராகவன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.இப்படி ஒரு நிலையில் இன்னும் மூன்று நாளில் சோனியா திருமணம் என்ற ஒரு செய்தி வைரலாக பேசப்பட்டுவந்தது. அதற்கு முக்கிய காரணமே கடந்த நாளாக சோனியா அகர்வால் ட்விட்டர் பக்கத்தில் திருமண சம்மந்தப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்ததுதான் காரணம்.

இதை பார்த்து தான் ரசிகர்கள் பலரும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறீர்களா என்று வினாவி வந்தனர். ஆனால், உண்மையில் சோனியா அகர்வால், புதிதாக ஒரு event management கம்பெனி ஒன்றை ஆரம்பித்து உள்ளார். அதற்கு தான் இத்தனை நாட்கள் இவ்வளவு பில்ட்டப்.

-விளம்பரம்-
Advertisement