பிரான்சில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட் – எங்கு அமைக்க போகிறார் தெரியுமா ?

0
1290
soonu
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக் குறை குறித்து பேசிய நீதிபதிகள் , மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. இதை மத்திய அரசாங்கம் சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு பிச்சை எடுத்தோ, திருடியோ, கடன் வாங்கியோ, அல்லது பணம் கொடுத்தோ, எதையோ செய்து, நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யுங்கள்,” என்று கூறினர்.

இதையும் பாருங்க : விவேக்கின் பல்வேறு படங்களில் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் காலமானார்.

- Advertisement -

இப்படி கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமல் பல ஆயிரம் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் சோனு சூட்,  கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் சோனு சூட் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். சமீபத்தில் கூட விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார்.இதேபோல கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.

-விளம்பரம்-

கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை சமூக வலைதளம் மூலம் சோனு சூட்டிம் உதவி கேட்கின்றனர்.அவ்வாறு உதவிகேட்கும் நபர்களுக்கு சோனு சூட் தன்னால் இயன்ற அளவிற்கு உதவி செய்து வருகிறார்.இந்நிலையில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்ய நடிகர் சோனு சூட் முடிவு செய்துள்ளார்.

குறைந்தபட்சம் 4 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை பிரான்சில் இருந்து இறக்குமதி செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். அதில் முதல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இன்னும் 12 நாட்களில் இந்தியாவுக்கு வர உள்ளது.ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிறுவப்பட உள்ளது. சோனு சூட்தின் இந்த செயலை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், நாட்டின் பிரதமர் செய்ய வேண்டியதை இவர் செய்கிறார் என்று

Advertisement